என்ன கருமம் டா இது.. பலூன் அக்காவுக்கே பார்வதி பண்றது பிடிக்கலையா.. பொளந்துக் கட்டிய பிரசாந்த்!
சென்னை: தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் இந்த வாரமும் ரிலீஸ் ஆகாத நிலையில், சினிமாவை விட்டு விட்டு பிக் பாஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டார் போல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி. நேற்று தான் டிஆர்பி குறைந்து விட்டது, இந்த ஷோவை யாருமே பார்க்கவில்லை என பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அடுத்ததாக "என்ன கருமம் டா இது" என புதிய புரொமோவை ஷேர் செய்து கழுவி ஊற்றியுள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதியின் மகள் கூட பார்க்க முடியாது என ரசிகர்கள் தொடர்ந்து அந்த ரியாலிட்டி ஷோவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் ஆபாச வசனங்களை பேசி விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், இந்த சீசனில் பெண் போட்டியாளர்களும் ஆண் போட்டியாளர்களும் ஆபாசமாக பேசுவதை தாண்டி ஆபாசமாகவே நடந்துக் கொள்வது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜே பார்வதி, பலூன் அக்கா என சோஷியல் மீடியாவில் டிரெண்டான அரோரா சின்க்ளேர், எஃப்ஜே மற்றும் கம்ருதீன் உள்ளிட்டோர் தான் தொடர்ந்து இது போன்ற காவிய காதலில் ஈடுபட்டு ரசிகர்களை காண்டாக்கி வருகின்றனர்.
பலூன் அக்காவையே காண்டாக்கிய பார்வதி: வெளியே ஆபாசமாக பல வீடியோக்களை போட்டு வந்த பலூன் அக்காவையே விஜே பார்வதி காண்டாக்கி விட்டாரே என ரசிகர்கள் பேசும் அளவுக்கு பார்வதி கம்ருதீன் உடன் பேசுறா பேசுறா பேசிட்டே இருக்கா என்றும், அப்படியே காவிய காதல் இதுங்க பண்றது என அரோரா அழுகாத குறையாக ஒப்பாரி வைத்துள்ளார்.

ஆறுதல் சொல்ல அணைத்துக் கொண்ட எஃப்ஜே: அரோரா மற்றும் எஃப்ஜே இருவரும் வெளியே ஏற்கனவே ஒன்றாக இணைந்து கில்மா வெப்சீரிஸில் நடித்துள்ளனர். இந்நிலையில், கம்ருதீன் தன்னுடன் பேச மாட்டேங்கிறான், பார்வதி பக்கம் போயிட்டான் என நினைத்து ஃபீல் செய்து அழுததும் நான் இருக்கேன் செல்லம் என பார்வதியுடன் கம்ருதீன் என்ன கன்றாவியை பண்ணுகிறாரோ அதே கருமத்தை எஃப்ஜே மற்றும் அரோரா செய்வதை பார்த்த பிரசாந்த் ரங்கசாமி காண்டாகி "என்ன கருமம் டா இது" என ட்வீட் போட்டுள்ளார். பிக் பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து இந்த சீசனை ட்ரோல் செய்து வந்தாலும், இளைஞர்கள் மத்தியில் இந்த ஏடாகூட காதல் காட்சிகளுக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











