Bigg Boss: TTF-ஐ வென்ற அரோரா! ஒரு கேள்வியால் அவமானப்பட்ட பார்வதி - கமருதீன்.. ஃபயர் விடும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில் 13வது வாரத்தில் உள்ளது. இந்த வாரத்தில் போட்டியாளர்கள் அனைவரும் நாமினேட் ஆகி உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் இறுதியாக போட்டியாளர் அரோரா வெற்றி பெற்று, இந்த சீசனின் முதல் ஃபைனலிஸ்ட்டாக மாறியுள்ளார்.
இந்த வாரத்தில் நடைபெற்ற முதல் TTF போட்டியில் அரோரா இரண்டாவது இடம் பிடித்து, 8 மதிப்பெண்கள் பெற்றது மட்டும் இல்லாமல், முதல் இடத்தை வென்ற சுபிக்ஷாவுக்கு எளிதில் அதை விட்டுக் கொடுத்துவிடவில்லை. குறிப்பாக மிகவும் கடினமான டாஸ்க்கில் உறுதியாக விளையாடி அசத்தினார். அந்த டாஸ்கில் இருந்து வெளியேறும்போது கூட, சுபிக்ஷாவை அழைத்து, அவரை தன்னை நோக்கி கவனத்தை திருப்ப வைத்து, கீழ் இறங்கியது ரசிகர்கள் மனதில் அரோராவை உயரத்திற்கு கொண்டு சென்றது.
இப்படி இருக்கும்போது அடுத்தடுத்த டாஸ்க்குகளிலும் அரோரா ஆவரேஜான மதிப்பெண்கள் பெற்றார். குறிப்பாக கில்லர் ஸ்டிக்கர் டாஸ்க்கில் அவரது கேம் ப்ளே மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் கார் டாஸ்கில் கடைசி வரை உள்ளே இருந்து அந்த டாஸ்க்கின் வெற்றியாளராக மாறினார். அதற்கு முன்னதாக நடத்தப்பட்ட டாஸ்க்கான பொது அறிவு கேள்வி டாஸ்க்கில் அரோராவின் செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அரோரா: அதாவது அந்த டாஸ்க்கில் அரோராவை நோக்கி கமருதீன் கேள்வி எழுப்பினார். அதாவது தமிழ்நாட்டின் மாநில மரம் எது என்ற கேள்விக்கு, பனைமரம் (ஒற்றைப் பனைமரம்) என்ற சரியான பதிலைக் கூறி கமருதீனுக்கு ஷாக் கொடுத்தார். அரோரா பதில் சொல்ல மாட்டார் என்று கமருதீன் நினைத்துக் கொண்டு கேவலமான பார்வையை வெளிப்படுத்தினார். ஆனால் அரோரா சரியான பதிலைச் சொல்லி கமருதீன் முகத்தில் கரியைப் பூசி விட்டார்.
ரசிகர்கள் ரியாக்ஷன்: இது இப்படி இருக்க, இதற்கு அடுத்து நடைபெற்ற கார் டாஸ்க்கில் கமருதீன் மற்றும் பார்வதி இணைந்து கொண்டு, அரோராவை மனதளவில் காயப்படுத்தும் படியாக பேசி வந்தார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டு, அந்த டாஸ்கிலும் வெற்றி பெற்றார். TTF டாஸ்க் தொடங்குவதற்கு முன்னதாகவே பார்வதியும் கமருதீனும் அரோராவை மிகவும் மோசமாகத்தான் விமர்சித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசும்போது கூட அரோராவை தரக்குறைவாக விமர்சித்து பேசி வந்தார்கள். இப்படி இருக்கும்போது TTF-ஐ வென்று, கமருதீன் மற்றும் பார்வதிக்கு பளார் விட்டுள்ளார் என்றுதான் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











