Bad Touch Issue: மன அழுத்தத்தில் கத்திய கமருதீன்.. பார்வதிக்கு ஆதரவாக திரண்ட ஹவுஸ் மேட்ஸ்.. செம சண்டை

சென்னை: பிக்பாஸ் சீசன் 9இல் காதல் ஜோடிகள் என்றால் அது கமருதீன் - பார்வதி ஜோடி தான். ஆனால் இவர்களுக்கு இடையிலேயே அவ்வப்போது முட்டிக் கொள்கிறது. இதில் பெரிய பிரச்னை என்னவென்றால், Bad Touch பிரச்னைதான். ஒருமுறை பார்வதி, சக போட்டியாளர் தர்பூசணி திவாகரிடம் பேசுகையில், கமருதீனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தெரிவித்தார். இன்னும் சொல்லப்போனால், அவர் தன்னை தொடுவது சரியாகப் படவில்லை என்று தெரிவித்தார். இதை திவாகர் நேரடியாகவே கமருதீனிடம் சென்று, லேடிஸ் விஷயத்தில் மாட்டிக் கொண்டாயா, இரு வீக் எண்ட் வரட்டும் என்று சொல்ல பிரச்னை ஆரம்பித்தது.

அதன் பின்னர் கமருதீனும் பார்வதியும் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். அதுவும் இருவரும் இணைந்து பல வழக்குகளில் சிக்கிக் கொண்டார்கள். இவர்களால் மொத்த வீடுமே கூட பெரிய பிரச்னையை சந்தித்தது. மேலும் ரசிகர்களுக்கும் டென்ஷன் அதிகரித்தது. இப்படி இருக்கையில், திவாகர் சொன்ன வார்த்தையை கமருதீன், பார்வதியிடம் ஓபனாகவே கேட்டுவிட்டார்.

Bigg Boss Tamil 9 Bad Touch Issue Between Kamarudin And VJ Parvathy

இதில் பார்வதி நேரடியாக மன்னிப்போ அல்லது, மறுப்போ தெரிவிக்காமல், எனக்கு அப்படிதான் அப்போது தோன்றியது. இத்தனை கேமராக்கள் இருக்கிறது, இங்கு அதை விவாதிக்க முடியாது என்று ஒரு முறையும், மன்னித்துவிடுங்கள் என்று ஒரு முறையும் என மாறி மாறி பேசினார். இந்த பேச்சுவார்த்தை கடந்த வாரத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் நடைபெற்று வந்தது. இப்படி இருக்கும்போது அது இன்று வீட்டார் முன்பு விவாதிக்கப்பட்டது.

பேட் டச்: இதில் கமருதீன் பேசுகையில், நான் பேட் டச் செய்தேன் என்று தனக்கு தோன்றியதாக பார்வதி கூறுகிறார், அதன் பின்னர் ஒரு முறை மன்னிப்பு கேட்கிறார். இதை மாறி மாறி செய்து கொண்டு இருந்தால் ஒரு மனிதனாக எனது மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். என்னை இத்தனை கேமராக்கள் இருக்கும் இடத்தில், நான் பேட் டச் செய்தேன் என்று சொல்லிவிட்டு பார்வதி, அழுதால் நம்பிவிடுவீர்களா? எனக்கும் வாழ்க்கை இருக்கிறது. எனக்கு வெளியே எதிர்காலம் உள்ளது என்று ஆத்திரத்திலும் மன அழுத்தத்திலும் கத்தி பேசினார்.

Bigg Boss Tamil 9 Bad Touch Issue Between Kamarudin And VJ Parvathy

பார்வதி விளக்கம்: அதன் பின்னர் பார்வதி பேசும்போது, கமருதீன் என்னிடத்தில் மோசமாக எல்லாம் நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை பேட் டச் செய்யவில்லை. எனக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற அனைத்துமே எனது சம்மதத்துடன் தான் நடைபெற்றது. நான் செய்த தவறே, இந்த விஷயம் தொடர்பாக திவாகரிடம் பேசியதுதான். மேலும் திவாகரிடத்தில் பேசும் போது, பேட் டச் போன்ற வார்த்தைளை பயன்படுத்தியதும் தான். மற்றபடி கமருதீன் என்னை பேட் டச் செய்தார் என்று நான் குற்றம் சாட்டவில்லை என்று தெரிவித்தார்.

முடிவு: இப்படி இருக்கும்போது, இந்த விஷயத்தை வீட்டார் முன்னிலையில் விவாதித்ததால், சக போட்டியாளர்களும் கமருதீனை பார்வதி குற்றம் சாட்டவில்லை, இருவருக்கும் இடையில் நடைபெற்றவை இருவரது சம்மதத்துடன் தான் நடைபெற்றுள்ளது. மேலும், கமருதீன் உங்களை நாங்கள் யாரும் தவறாக நினைக்கவில்லை. பார்வதி உங்களிடத்தில் மன்னிப்பு கேட்டதும், உண்மையாக அழுது கேட்டுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசி பிரச்னையை முடித்து வைத்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X