Bigg Boss: ரெட் கார்டு பாரு & கமருதீன் பெயரைச் சொன்ன பிக்பாஸ்.. டக்கென ரியாக்ட் செய்த ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று மற்றும் நாளையுடன் அதாவது ஜனவரி 17 மற்றும் 18ஆம் தேதிகளுடன் வெகு சிறப்பாக முடியவுள்ளது. இந்த சீசனில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்தாலும், பெரும் எதிர்பார்ப்பு அரோரா மற்றும் திவ்யா என இருவரில் யாராவது டைட்டிலை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பார்வதி மற்றும் கமருதீன் பெயரை பிக்பாஸ் வீட்டிற்குள் சொன்னதும், சக போட்டியாளர்கள் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது இந்த சீசனில் முதலில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்கள் 18 பேர் மற்றும் வைல்டு கார்டில் 6 பேர் என மொத்தம் 24 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் என போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இப்படி இருக்கையில் சில வாரங்களுக்கு முன்னர், அதாவது டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகள் நடைபெற்ற வாரத்தில் சக போட்டியாளரான சாண்ட்ராவை விஜே பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து காருக்குள் இருந்து எட்டி தள்ளி உதைத்து வெளியேற்றினர். அதன் பின்னரும் இருவரும் இறக்கமற்ற முறையில், மெடிக்கல் டீம் உள்ளது என்று கூறியது, சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவர்களின் இந்த நடவடிக்கையால் விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். இருவருக்கும் ரெட் கொடுக்கப்பட்டதற்கு பெரும்பான்மையான ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். இந்நிலையில் இன்று மற்றும் நாளை இந்த இரண்டு நாட்களுக்கான எபிசோட் உடன் இந்த சீசன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரையும் வீட்டில் ஒரே இடத்தில் அமரவைத்து, அவர்களின் ஆட்டம் தொடர்பான வீடியோவை போட்டுக் காட்டி, அனைவரது பெயரையும் சொல்லி அவர்களின் வெளி உலக வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது வீட்டில் இருந்த அனைவரின் பெயரையும் அவர் சொல்லும்போது ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய பார்வதி மற்றும் கமருதீன் பெயரையும் உச்சரித்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் உடனே எழுந்து நின்று, கைதட்டி பிக்பாஸை பாராட்டினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











