Bigg Boss: மானமே போச்சு.. போட்டியாளர்களுக்கு பளார் விட்ட பிக்பாஸ்.. இன்னும் அதை மட்டும் தான் செய்யல!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ஐ எப்படியாவது சுமாரான சீசனாகவாவது தேத்தி விடலாம் என்று பிக் பாஸ் தரப்பில் பலன் கட்ட முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் என்பது ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தியை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்படியான நிலையில் போட்டியளர்கள் அனைவரையும் அமர வைத்து பிக்பாஸ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த சீசனில் போட்டியாளர்கள் சொதப்பலோ சொதப்பல் செய்து வரும் நிலையில், குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான கங்குவா படத்தைப் பார்த்து ரசிகர்கள் எப்படி, படம் முழுக்க கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என விமர்சித்தார்களோ, அதேபோல் இந்த சீசனைப் பார்த்தும் அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரையிலான பிக் பாஸ் சீசன்களிலேயே மிகவும் மோசமான சீசனாக இந்த சீசன் ஏற்கனவே உருவெடுத்து விட்டது. விஜய் சேதுபதி தொடங்கி, வைல்ட் கார்டு போட்டியாளர்கள் தொடங்கி, கடந்த வார டாஸ்க்கில் கடந்த சீசன்களில் போட்டியாளர்களாக இருந்து மக்கள் மனதை வென்ற போட்டியாளர்களான தீபக், மஞ்சரி மற்றும் பிரியங்காவை அனுப்பியும் போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறப்பட்டது.

Bigg Boss Tamil 9 Bigg Boss Slams This Season Contestants During The Task Because Of Over Noise
Photo Credit:

ஆனால் , போட்டியாளர்களோ நாங்க திருந்தமாட்டோம், எங்களை திருத்திக் கொள்ள மாட்டோம், எங்கள் சௌகரித்துக்குத்தான் இருப்போம் என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது, அவர்களின் நடவடிக்கை. இப்படி இருக்கும்போது, இம்முறை அனைத்து போட்டியாளர்களையும் அமரவைத்து பிக் பாஸ் பளார் விட்டுள்ளார்.

ஏன் கத்துகிறீர்கள்: அதாவது அவர் பேசுகையில், " உங்களை நான் திட்டி பார்த்து விட்டேன், புத்திமதி சொல்லி பார்த்து விட்டேன், ஆனாலும் இந்த வீட்டில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. நான் சொல்வது எதுவும் உங்களிடத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே நானும் இந்த சீசனில் போட்டியாளராக குரல் வழியே கலந்து கொள்ள இருக்கிறேன். டாஸ்க் லெட்டர் படிக்கும் போது எவ்வளவு ஜாலியாக இருந்தது. டாஸ்க் தொடங்கிய பின்னர் நகைச்சுவை என்றாலும் கத்துகிறீர்கள், சண்டை என்றாலும் கத்துகிறீர்கள். முரண்பாடு என்றாலும் கத்துகிறீர்கள்.

Bigg Boss Tamil 9 Bigg Boss Slams This Season Contestants During The Task Because Of Over Noise
Photo Credit:

ரசிகர்கள் ஆதங்கம்: இதை எப்படி கையாள்வது. ஒரு அணியாக இந்த சீசனை எப்படி முன்னேற்றிச் செல்வது. இன்றைக்கு நகைச்சுவை வேண்டும், பொழுதுபோக்கு வேண்டும். கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் ஆதிக்கம் மிகவும் முக்கியமான பங்கு இல்லையா?. ஆனால் யாரும் அப்படி நடந்து கொண்டதாக தெரியவில்லை" என்று மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பிக் பாஸ் ரசிகர்களோ, என்னங்கடா இந்த சீசன் போட்டியாளர்கள் பிக் பாஸையே இந்த அளவுக்கு கதற வச்சிட்டு இருக்காங்க என்று பதிவிட்டு வருகிறார்கள். எப்படியோ நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லி இருக்காருங்க பிக் பாஸ். ஆனால் போட்டியாளர்கள் இதைப் புரிந்து கொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X