ஊரே சொல்லுச்சு.. இந்த அசிங்கம் தேவையா? அதை மூடவும் தெரியனும் பார்வதினு கிளாஸ் எடுத்த பிக் பாஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் ரசிகர்கள் பலரையும் டென்ஷன் ஆக்கிய போட்டியாளர்களில் வி.ஜே. பார்வதிக்கு முதலிடம் என்று சொல்லும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருந்து கொண்டு உள்ளது. சில இடங்களில் மிகவும் தெளிவாக பேசக்கூடிய பார்வதி பல இடங்களில் நீயா நானா சண்டைக்குள் சிக்கி பெரிய பஞ்சாயத்தை உருவாக்கி விடுகிறார். பார்வதியிடம் என்ன பேசினாலும் பார்வதி வேறு ஒரு கோணத்தில் இருந்து புதிதாக ஏதாவது பஞ்சாயத்தை கிளப்புவார் என்று சக போட்டியாளர்கள் யோசிக்கிறார்களோ என்னவோ, ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களும் அமைதியாகிவிடுவார்கள்.

பார்வதியை முதலிடம் என்றால் தர்பூசணி திவாகர் இரண்டாவது இடம். மிகவும் சண்டை பிடிப்பார்கள் வாய் பேசுவார்கள் என்று எதிர்பார்த்த சில போட்டியாளர்கள் கூட தங்கள் பக்கம் வண்டி திருப்பினால்தான் பதிலடி கொடுக்கிறார்களே தவிர மற்றபடி எப்போதும் கப்சிப் மோட் தான். இப்படி இருக்கும்போது பார்வதி மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு என்பது அவர் கத்திக் கொண்டே இருக்கிறார் என்பது தான். அதுவும், சில நேரங்களில் அவர் கத்துவதை பார்த்தால் எதற்காக இப்படி எல்லாம் கத்தனும், வேண்டும் என்றே ப்ரோமோவில் வரவேண்டும் என்று கத்துகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழாமல் இல்லை.

Bigg Boss Tamil 9 Bigg Boss Slams VJ Parvathy For Her Over Speech On Show
Photo Credit:

முதல் நான்கு வாரங்களில் சண்டையை மட்டுமே பெரும்பான்மையாக போட்டுக் கொண்டு இருந்த பார்வதி கடந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்க்கில், சக போட்டியாளர்களால் சிறந்த பர்ஃபாமென்ஸ் என்று தேர்வு செய்யப்பட்டார். இதனால் வீட்டுத் தல போட்டிக்கும் தேர்வானார்.

கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ்: இந்த வாரத்தில் பிக் பாஸ் தரப்பில் இருந்து கானா சாம்ராஜ்யம் மற்றும் தர்பூசணி சாம்ராஜ்யம் என்ற கான்செப்ட் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்களின் ஈடுபாடு பிக் பாஸ்க்கு கடுப்பை ஏற்ற அனைத்து போட்டியாளர்களையும் அமர வைத்து, அனைவரையும் கிழித்து தொங்க விட்டு விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

Bigg Boss Tamil 9 Bigg Boss Slams VJ Parvathy For Her Over Speech On Show
Photo Credit:

வாயை மூடவும் கத்துகோங்க: அப்போது பார்வதி குறித்து பேசுகையில்,பார்வதி, கதவை எப்போது மூட வேண்டும் என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் அதாவது வாயை எப்போது மூட வேண்டும் என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாசூக்காக சொன்னார். இதைக் கேட்டதும் பார்வதியோ, சிரித்துக் கொண்டு சரி என்று கூறினார். தற்போது இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவிக் கொண்டு உள்ளது.

இந்த அசிங்கம் தேவையா?: சில இணையவாசிகளோ, பார்வதிக்கு இந்த அசிங்கம் தேவையா என்று கேட்டு வருகிறார்கள். விஜய் சேதுபதி தொடங்கி, வைல்ட் கார்டு போட்டியாளர்கள், முந்தைய சீசன் போட்டியாளர்கள் என பலரும் சொல்லியும் பார்வதி தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை. அவர்கள் சொன்னபோது கூட எனக்கு என்ன பண்ணனும் என்று தெரியும் என்று சொல்லி வைல்ட் கார்டு போட்டியாளர்களின் வாயை அடைத்தார். இப்படி இருக்கும்போது, பிக் பாஸே தற்போது பார்வதியை நோக்கி எப்போது பேச வேண்டும் என்று எப்படித் தெரிகிறதோ, அதேபோல் எப்போது பேச்சை முடிக்க வேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X