பார்வதியை எட்டி உதைத்த சபரி.. 4 அடி தள்ளிப்போய் விழுந்த பார்வதி.. ரசிகரின் அந்த கமெண்ட் இருக்கே!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த வாரத்துடன் சேர்த்து மொத்தம் 10 வாரங்களை நிறைவு செய்து, 11வது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த வாரத்தில் மொத்தம் இரண்டு போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். சனிக்கிழமை எபிசோடில் ரம்யா ஜோவும், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வியானாவும் எலிமினேட் செய்யப்பட்டார்கள். இந்த வார எபிசோட்கள் எல்லாம் முடிந்த பின்னர் பார்வதி சபரியை லேசாக எட்டி உதைக்க, அதற்கு சபரி பதிலுக்கு உதைக்கிறேன் என்று உதைத்ததில் பார்வதி சுமார் 4 அடி தள்ளிப்போய் விழுந்துவிட்டார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த வார வீக் எண்டில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த விவகாரம் என்றால் பார்வதி மற்றும் கமருதீன் வாரம் முழுக்க பிக் பாஸ் விதியை பின்பற்றாமல், மைக்கை மறைத்து வைத்து பேசியதும், மைக்கை கழட்டி வைத்து பேசியது தொடர்பான விவகாரம் தான். சனிக்கிழமை எபிசோடில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி, பார்வதி மற்றும் கமருதீனை கையாண்ட விதம் பலருக்கும் பிடித்திருந்தது என்றாலும், அவர்கள் இருவரையும் வெளியேற்றி இருக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 Contestant Sabari Kicked VJ Parvathy Video Goes Trending
Photo Credit:

இப்படி இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை எபிசோட் முடிந்து போட்டியாளர்கள் வீட்டில் சகஜமாக இருந்து வந்தார்கள். அப்போது பார்வதியும் சபரியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். சபரியை நோக்கி பார்வதி, வாடா டிக்கியில அடிச்சு விளையாடலாம் என்று கூறினார். அதற்கு உடனே சபரியோ, வேணாம் டி, டிக்கியில அடிப்பதில் என்னடி பெருமை என்று கேட்க கேட்க பார்வதி சபரியை பின்னால் உதைத்து விட்டார்.

எட்டி உதைத்த சபரி: இதையடுத்து சபரி, எனக்கு அப்படி எல்லாம் உதைக்கத் தெரியாது, இப்படித்தான் உதைக்கத் தெரியும் என்று பார்வதியை பின்னால் எட்டி உதைத்தர். இதனால் பார்வதி சுமார் 4 அடி தள்ளிப்போய் விழுந்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத பார்வதி கீழே விழுந்ததும், ஏன்டா என்னை இப்படி உதைத்தாய் என்று கேட்டுக் கொண்டே விளையாட்டாக அடிக்கிறார்.

ரசிகர்கள் கமெண்ட்: மேலும் சபரி நீ இவ்வளவு வீக்காக இருப்பாய் என்று எனகுத் தெரியாது என்று கூறிக் கொண்டே பார்வதிக்கு அடிபட்டு விட்டதா என்று பார்க்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பகிரும் இணையவாசிகள், சபரி பாலின சமத்துவத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டார் போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X