Bigg Boss: பலூன் அக்காவுக்கு தான் ஓட்டு.. டைட்டிலை ஜெயிச்சுட்டு பலூன் ஷோ காட்டுவாங்க.. கூல் சுரேஷ் ஓவர் பேச்சு

By Staff

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வரும் வார இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. பெரும்பாலான ரசிகர்கள் கானா வினோத் தான் டைட்டில் வின்னர் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். சக போட்டியாளர்களும் கூட அப்படித்தான் நினைத்தார்கள். அப்படி இருக்கும்போது, கானா வினோத் பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். இதனால் டைட்டிலை வெல்வது அரோரா அல்லது திவ்யா கணேஷ் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் கூல் சுரேஷ் அரோராவுக்கு வாக்கு கேட்டு பேசியுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், கண்டனத்தையும் பெற்று வருகிறது.

கூல் சுரேஷ் அந்த வீடியோவில், " பலூன் அக்கா ஜெயிச்சதுக்கு அப்புறம், என்னை மாதிரி இளசுகளுக்கு வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் பழசுகளுக்கு, மனசுக்கு இதமாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக அந்த பலூன் அக்கா, பலூன் ஷோ காட்டுவாங்க. மத்தவங்க டைட்டிலை வென்றால் வீடு கட்டணும், கார் வாங்கணும் என்று சொல்லுவார்கள். ஆனால் பலூன் அக்கா ஏகப்பட்ட பலூன்களை வாங்கி, நம்மைப் போன்ற இளைஞர்களை சந்தோஷப்படுத்து வாங்க. என்னுடைய ஓட்டு பலூன் அக்காவுக்குத்தான். Vote For பலூன் அக்கா" என்று பேசியுள்ளார்.

Bigg Boss Tamil 9 Cool Suresh Ask Vote For Aurora And He Comments About Her As Balloon Akka
Photo Credit:

அரோரா: இவரது இந்த வீடியோ பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தாலும், ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரோரா கலந்து கொள்ளும் போது அரோராவின் தோழி ரியா மிகவும் முக்கியமான ஒன்றைப் பேசினார். அதாவது வெளியில் எனது தோழிக்கு வேறு பெயர் ( பலூன் அக்கா) உள்ளது. அந்த பெயர் நன்றாக இல்லை. அந்த பெயரை அவர் மாற்றுவார் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். இப்படி இருக்கையில், அரோராவின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Bigg Boss Tamil 9 Cool Suresh Ask Vote For Aurora And He Comments About Her As Balloon Akka
Photo Credit:

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: இன்னும் சொல்லப்போனால் அரோரா தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி விட்டார். அவரது பேச்சும், செயலும் நடவடிக்கையும் என தனக்கென தனி மரியாதையை உருவாக்கிக் கொண்டுள்ளார் அரோரா. இந்நிலையில் அரோராவை மீண்டும் பலூன் அக்கா என்று கூல் சுரேஷ் சுட்டிக் காட்டியது அவரது பிக்பாஸ் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்களாக மாறியவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கூல் சுரேஷை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X