பேட் டச் செய்தாரா கமருதீன்?.. திவ்யா சொல்றதை கேட்டு சரினு சொல்லும் சான்ட்ரா.. என்னங்க நடந்தது?

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃப்ரீஷ் டாஸ்க் நடக்கவுள்ளது என்று போட்டியாளர்கள், தங்களின் குடும்பத்தினருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ரசிகர்களும் இந்த ஃபேமிலி ரவுண்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது வீட்டில் பெரிய பிரச்னையே ஆரம்பித்துள்ளது.

அதாவது இந்த சீசனின் தொடக்கத்தில் கமருதீன் தன்னிடம் பேட் டச் செய்வது போல தோன்றுகிறது என்று பார்வதி, தர்பூசணி நட்சத்திரம் திவாகரிடத்தில் தெரிவித்தார். இவர் இப்படி தெரிவித்ததும், திவாகர், கமருதீனை நோக்கி, வீக் எண்ட் வரட்டும் விஜய் சேதுபதி சாரிடம் உன்னைப் பற்றி சொல்லுகிறேன். பொம்பள விஷயத்தில் மாட்டிக்கிட்டியேடா என்று எல்லாம் கேட்டுள்ளார். இதனால் மிகவும் மன வேதனைக்கு ஆளான கமருதீன், இது தொடர்பாக பார்வதியிடம் இப்போது கேள்வி எழுப்பினார்.

Bigg Boss Tamil 9 Divya And Sandra Discuss About Kamarudin Bad Touch Issue With VJ Parvathy
Photo Credit:

இது தொடர்பாக பேசும்போது நான் பேட் டச் செய்யும் அளவுக்கு கீழ்தரமானவன் இல்லை. ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் நான் அவரைத் தொடமாட்டேன். நான் உன்னை பேட் டச் செய்தேனா என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். இதற்கு பார்வதி ஆம் அல்லது இல்லை என்று பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தார் கமருதீன். ஆனால் பார்வதியோ எனக்கு தோன்றியது இதுதான். அதைத்தான் நான் வெளிப்படுத்தினேன் என்று கூறினார்.

கோபத்தில் கமருதீன்: இதனால் கடும் கோபத்திற்கு ஆளான கமருதீன், இது எனது குணநலனை சீரழிப்பது போல உள்ளது. மேலும் நான் வாழ்கையில் ஒன்றுமே இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன். அப்படி கஷ்டப்பட்டு வந்த எனக்கு உன்னிடத்தில் மோசமாக நடந்து கொள்வதுதான் வேலையா? என்றும் கேள்வி எழுப்பினார். ஒரு முறை இருவருக்கும் இடையிலான உரையாடலில் பிளாஸ்டிக் சேரை எட்டி உதைத்தார். அதன் பின்னர் பார்வதி, கமருதீனை நோக்கி, பேபி என்று அழைக்க, பேபி என்று சொன்னால் மூஞ்சியை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டினார் கமருதீன். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் கமருதீனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள்: தன்னிடத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்ட ஒருவருடன் பார்வதி ஏன் காதலில் இருக்கிறார்? அப்படி என்றால் பார்வதி சொல்வதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லையே என்றும் பேசி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது வீட்டில் உள்ள சக போட்டியாளர்களான திவ்யா மற்றும் சான்ட்ரா ஆகியோர் பேசிக் கொண்டதும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சான்ட்ரா & திவ்யா: அதாவது, சான்ட்ராவை நோக்கி, இப்போது வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருப்பது, இந்த பேட் டச் விவகாரம் தான். இது பக்காவான பார்வதியின் கேம் பிளான். கமருதீனிடம் எடுத்துச் சொன்ன பிறகு கமருதீன் தனது ஆட்டத்தை மாற்றிக் கொண்டார். இப்போது இந்த விவகாரத்தை பெரிதாக்கி கமருதீனை வெளியேற்ற திட்டமிட்டு இது குறித்து பார்வதி பேசிக் கொண்டு இருகிறாரோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது என்று கூற, உடனே, சான்ட்ராவோ ஆமாம் எனக்கும் அந்த சந்தேகம் வருகிறது என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X