Bigg Boss: கமருதீன் - பாரு மேல தப்பே இல்லை.. ஊமை குத்தாக குத்திய ரசிகர்கள்.. அந்தர் பல்டி அடித்த வியானா
சென்னை: பிக்பாஸ் தமிழ் 9 இல் இருந்து பார்வதி மற்றும் கமருதீன் என இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டார். இது தொடர்பான ப்ரோமோ வெளியானதில் இருந்து மொத்த பிக் பாஸ் ரசிகர்களும் இது குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த சீசன் போட்டியாளர்களில் ஒருவரான வியானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வி.ஜே. பார்வதி மற்றும் கமருதீன் என இருவரையும் ஆதரித்தும், சான்ட்ராவுக்கு எதிராகவும் பதிவிட்டிருந்தார். இதனால் இணையவாசிகள் வியானாவுக்கு எதிராக விமர்சனங்களை அடுக்கினர்.
இது மட்டும் இல்லாமல், பார்வதி மற்றும் கமருதீனுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்ததை அடுத்து வியானா தனது கருத்தில் இருந்து பின் வாங்கி உள்ளார். அதாவது, " நான் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்த கருத்து என்பது பார்வதி மற்றும் கமருதீனுக்கு ஆதரவாக என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். சிலர் அப்படித்தான் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
வியானா: ஆனால் நான் எனது பதிவில் சொல்ல வந்தது, இந்த சீசனின் தொடக்கத்தில் நடைபெற்ற மாஸ்க் டாஸ்க்கிலேயே சக போட்டியாளர்களான இப்போது வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள், வெளியேறிய போட்டியாளர்கள் என அனைவரும் பார்வதி மற்றும் கமருதீனுக்கு எதிராக பேசி, அவர்கள் செய்தது தவறு என்று சொல்லி இருந்தால், இன்றைக்கு இப்படி மோசமாக அவர்கள் நடந்து கொள்ளும் அளவுக்கு வந்திருக்காது. அதே நேரத்தில் அவர்கள் செய்ததை எல்லாம் சாதாரணமானதாக மாற்றி விட்டதால் வந்ததன் விளைவு இது.

மதிக்க மாட்டார்கள்: கெட்ட வார்த்தைகள் பேசும் போது கடுமையாக கண்டித்திருந்தால் இப்படியான நிலை இன்றைக்கு வந்திருக்காது. சான்ட்ராவுக்கு ஏற்பட்டதை நான் ஆதரிக்கவில்லை , அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். போட்டியாளர்கள் இப்போது எடுத்திருக்கும் முடிவை எப்போதே எடுத்திருக்க வேண்டும். ஒரு டாஸ்க்கை டாஸ்க்காக விளையாடத் தெரியாத போட்டியாளர்களாக இருக்கிறார்கள். தொடக்கத்தில் ஒரு டாஸ்க்கில் ஒருவரை ஒருவர் அட்டாக் செய்துதான் விளையாட வேண்டும் என்று மாற்றிவிட்டார்கள். அது தவறு என்று நான் சொன்னால் கூட என்னை புள்ளபூச்சியாக கூட மதிக்க மாட்டார்கள்" என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
போஸ்ட்: ஆனால் இந்த வீடியோ பதிவிடுவதற்கு முன்னர், நான் இந்த விவகாரத்தில் யாரையும் ஆதரிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை எப்படி எல்லாம் ட்விஸ்ட் செய்து விடுகிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. எல்லோரும் அவரவர் ஆட்டத்தை ஆடுகிறார்கள். இப்போது யாருக்காக மக்கள் ஆதங்கப்படுகிறார்களோ, அந்த போட்டியாளர் இதற்கு முன்னர் மிகவும் மோசமாக எல்லாம் நடந்து கொண்டார் என்பதும், மற்றவர்களை தாக்கினார் என்பதையும் நினைவு படுத்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











