ThankYou Bigg Boss! அந்த சம்பவத்திற்கு பிறகு நீங்க செஞ்ச அந்த ஒரு விஷயம் 100% சரி.. நீங்க அதை கவனித்தீர்களா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்தது குறித்து தான் மொத்த இணையமும் விவாதித்துக் கொண்டு இருக்கிறது. பெரும்பான்மையான ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்தது சரி தான் என்று கூறுகிறார்கள். சிலர், ஆரம்பத்திலேயே இவர்களை கடுமையாக கண்டித்திருந்தால், இந்த அளவுக்கு நடந்திருக்காது என்றும் தெரிவித்து வருகிறார்கள். இந்த மொத்த சம்பவத்திலும் பிக்பாஸின் அணுகுமுறை மிகவும் பாராட்டுக்குரியதாக பார்க்கப்படுகிறது.
கார் டாஸ்க்கில் தான் இருவரும் இணைந்து சான்ட்ராவை எட்டி உதைத்து வெளியே தள்ளி விடுகிறார்கள். அதன் பின்னரும், சான்ட்ராவின் கால், காரின் கதவுக்கு நடுவே மாட்டிக் கொண்டதை தெரிந்து கொண்டும், பார்வதி காரின் கதைவை மூட முயற்சித்துக் கொண்டே இருந்தார். இது எல்லாம் பார்ப்பதற்கே பயத்தை உருவாக்கியது.

இந்த மோசமான சம்பவம் நடை பெற்றதில் இருந்து அதன் பின்னர், இவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றும் வரை, ஒரு வார்த்தை கூட பிக் பாஸ் அவர்களிடத்தில் பேசவில்லை. இருவரும் கார் டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆகும் போது மட்டும் அவர்களுக்கு அவற்றை தெரிவித்தார். அதன் பின்னர், பிக் பாஸ் அவர்கள் இருவரிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்னர், கதவுக்கு அருகில் வந்து நின்று கொண்டு பார்வதி, பிக் பாஸின் குரலுகாக காத்துக் கொண்டிருந்தார். ஆனால், பிக்பாஸ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால், மதிக்க கூட இல்லை என்று கூறலாம். அதேபோல் கமருதீனிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. பிக்பாஸின் இந்த செயல் முற்றிலும் பாராட்டுக்குரியது, சரியானதும் கூட.
பிக்பாஸ்: இந்த சீசனில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்களில் பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோருக்கு தான், பிக்பாஸ் அதிக அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுத்தார். இந்த சீசனில் பெரும்பான்மையான வாரங்களில் அதிகப்படியாக விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கேட்ட போட்டியாளர் என்றால், அது பார்வதி தான். இவர்கள் இருவருக்கும் தான் அதிக அறிவுரைகளும் விஜய் சேதுபதியால் வழங்கப்பட்டுள்ளது.

100 % சரி: இந்நிலையில் இவர்கள் இருவரிடத்திலும் பிக் பாஸ் ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியே அனுப்பியது மிகவும் சரியானது. இனி வரும் காலங்களிலாவது தங்களது தவறை உணர்ந்து, அவர்கள் இருவரும் இப்படியான குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











