யார் ஆம்பளை? எது அம்பளைத்தனம்.. வாய் விட்ட FJக்கு பளார் விட்ட கனி.. அடடே ராஜமாதா பின்னுறாங்களே!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பிக் பாஸ் தரப்பில் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்ற என்னென்னவோ முயற்சி செய்கிறார்கள், ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்களோ எங்களை வைத்துக் கொண்டு இதுக்கு எல்லாம் முயற்சி செய்வது தவறு என்பது போல நடந்து கொள்கிறார்கள். வீட்டிற்குள் சென்றிருக்கும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. இப்படி இருக்கையில் வீட்டிற்குள் ஒன்னும் மண்ணுமாக இருக்கிற, " அன்பு கேங்" போட்டியாளர்களுக்கு இடையில் நடைபெற்ற விவாதம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முன் கோபக்காரன், தேவையில்லாத வார்த்தைகளைப் பேசி வம்பில் வான்டட்-ஆக சென்று ஆஜர் ஆக கூடியவர் என்றால் அது FJ தான். இவர் மீது உள்ள விமர்சனங்களில் மிகவும் முக்கியமான விமர்சனம் என்றால் அது, ஆதிரை எலிமினேட் ஆக கணிசமான பங்கு இவருக்கு உள்ளது என்பதுதான். போட்டியாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படும் போது, சில நேரங்களில் அடிக்கப் பாய்வது, வார்த்தைகளை வீசுவது, தனது திமிரை உடல்மொழியில் வெளிப்படுத்துவது என FJ என்றாலே கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் சுட்டிக் காட்டி ஹிஸ்டரி ஷீட் டெவலப் செய்யும் அளவுக்கு பல சம்பவங்களை செய்துள்ளார்.

Bigg Boss Tamil 9 Fans Appreciates Kani Thiru Slams FJ For Patriarchal speech
Photo Credit:

இப்படி இருக்கும்போது, அவர் சக போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கையில் மீண்டும் தேவையில்லாத வார்த்தைகளை விட்டு, கனி திருவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். இந்த உரையாடலில் கனி திருவை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதாவது FJ பேசுகையில், " நாலு பேர் வந்தா பேசுவேன், நாலு பேர் வந்து தான் பேசுவேன் என்றால் நான் இப்போதும் சொல்கிறேன் நான் ஆம்பள, நான் நின்னு பேசுவேன்" என்கிறார்.

பளார் விட்ட கனி திரு: FJ இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே, குறிக்கிட்ட கனி திரு, " ஒரு நிமிஷம் FJ, நின்னு பேசுவதற்கு ஆம்பளையாக இருக்க வேண்டும் பொம்பளையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தாதே, நான் FJ அதனால் நான் தைரியமாக பேசுவேன் என்று சாதாரணமாக சொல்லு" என்று பேசியுள்ளார். கனி திரு இவ்வாறு சொன்னதை உடனே FJஉம் ஏற்றுக் கொண்டதைப் போல், சரி என்று கூறுகிறார் தலையையும் ஆட்டுகிறார். இவர்களின் இந்த உரையாடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இணையவாசிகள் பலரும் கனி திருவை பாராட்டி வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 Fans Appreciates Kani Thiru Slams FJ For Patriarchal speech
Photo Credit:

ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு: அதாவது, " FJ இவ்வாறு பேசியது என்பது சமூகத்தில் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இப்படியான பேச்சுக்களுக்கு வார இறுதி வரை காத்திருக்காமல், பிக் பாஸ் தரப்பில் இருந்தே உடனடி ரியாக்‌ஷன் கொடுக்கப்பட்டால் நிகழ்ச்சிக்கு மட்டும் இல்லாமல், பார்த்துக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்குள்ளும் ஒரு ஆரோக்கியமான மனநிலை உருவாக எடுக்கப்படும் முயற்சியாக இருக்கும். FJ பேசியதைப் போலவேதான் பிரஜனும் வீட்டிற்குள் பேசுகையில் ஆம்பளையா இருந்தால் நேருக்கு நேராக பேச சொல்லு என்கிற வார்த்தையை பயன்படுத்தினார்.

சாபக்கேடு: இந்த சீசனிலும் சரி இதற்கு முந்தைய சீசன்களிலும் சரி தைரியமான பல போட்டியாளர்களைப் பார்த்துள்ளோம். தைரியமான பெண்களும் ஆண்களும் நிறைந்த சமூகம் தான் இது. தைரியமும் வீரமும் ஆண்களுக்குரியது என்றும், ஆம்பளைத்தனத்தின் அடையாளங்கள் இவைதான் என்று யாராவது தம்பட்டம் அடித்தால் அவர் இந்த சமூகத்தின் சாபக்கேடு. அவர்கள் திருந்த வேண்டும், அல்லது திருத்தப்பட வேண்டும் அவ்வளவே, அவர்களை சகித்துக் கொண்டு மட்டும் இருந்துவிடக் கூடாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X