ச்சீ.. ச்சீ கேவலம்.. சான்ட்ரா முகத்துக்கு நேராக பளார் கேள்விகளைக் கேட்ட கனி திரு.. ஃபயர் விடும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில் 11வது வாரத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் யார் டைட்டிலை தட்டித் தூக்குவார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இப்படி இருக்கும்போது, போட்டியாளர்கள் கனி திரு மற்றும் சான்ட்ரா என இருவருக்கும் இடையிலான பிரச்னை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டான்ஸ் மாரத்தான் 2.0 போட்டியின் போது கானா வினோத் மற்றும் சான்ட்ரா பாடலை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தனர். அப்போது மற்ற போட்டியாளர்கள் இவர்கள் இருவரின் கவனத்தை தொந்தரவு செய்ய சில முயற்சிகளை கூட்டாக மேற்கொண்டனர். அப்படி இருக்கும்போது கனிதிரு, பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், ஆதிரை, சுபிக்ஷா உள்ளிட்ட பலரும் சில பாடல்களைப் பாடி அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்தனர்.
இதில் பிரச்னை என்னவென்றால், போட்டி முடிந்த பின்னர், சான்ட்ரா சம்பந்தமே இல்லாமல், கனி திருவை அழைத்து, நீங்கள் விளையாடுவது எல்லாம் சரி, ஆனால் குழந்தைகளை வைத்து பாடல்கள் பாடி கேவலமாக விளையாடாதீர்கள் என்று கூறினார். இது கனி திரு மட்டும் இல்லாமல் சக போட்டியாளர்கள் அனைவருக்கும் ஷாக் தான். எபிசோட் பார்த்தாலே தெரிகிறது, கனி திரு குழந்தைகளை வைத்து பாடல்கள் பாடவில்லை என்பது.

பழைய பஞ்சாயத்து: அப்படி இருக்கும்போது, கனி திரு மீது ஏற்கனவே சான்ட்ராவுக்கு இருந்த கோபத்தின் வெளிப்பாடு தான் இது. அப்படியே இருந்தாலும் மற்ற போட்டியாளர்களும் இணைந்துதான் பாடல்கள் பாடினார்கள். அப்படிப் பார்த்தால் மற்ற போட்டியாளர்களிடமும் சான்ட்ரா கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் சான்ட்ரா அப்படிச் செய்யாமல் கனி திருவை மட்டும் டார்கெட் செய்து கேள்வி எழுப்பி உள்ளார். இதிலிருந்தே தெரிகிறது, இது வேண்டும் என்றே செய்யப்படுகிற மோசமான கேம் பிளான்.
பளார் கேள்வி: இதை கனி திரு கேள்வி எழுப்ப நினைத்து, அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில், சான்ட்ராவை நோக்கி கேள்வி எழுப்பினார். நீங்கள் நல்ல அம்மா, நான் கெட்ட அம்மாவா என்று கேட்டதற்கு, எனக்கு தெரியாது என்று மோசமான பதிலையும் அளிக்கிறார். மற்ற போட்டியாளர்களும் சான்ட்ரா பேசியது தவறு என்றும், நீங்கள் மன்னிப்பு கேட்பது தான் சரி என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சான்ட்ரா மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்கிறார்.
ரசிகர்கள் விளாசல்: தவறை ஏற்றுக் கொள்ளாத, அதை திருத்திக் கொள்ள தயாராக இல்லாத சான்ட்ரா, எதற்கு எடுத்தாலும் தனது குழந்தைகள் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்று எல்லாம் பேசுவது எல்லாம் கண்டெண்டுக்காத்தானா என்று கேள்வி எழாமல் இல்லை. வார இறுதியில் விஜய் சேதுபதி இந்த பிரச்னையை கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்னையில் ரசிகர்கள் பலரும் கனி திருவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











