Bigg Boss: பார்வதி கமருதீன் வீடியோவை செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்.. டிவி உடைந்தாலும் பரவாயில்லையாம்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கடைசியாக நடைபெற்ற கார் டாஸ்க்கில், கமருதீன் மற்றும் பார்வதி இணைந்து போட்டியாளர் சான்ட்ராவை காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளி விட்டார்கள். இது போட்டியாளர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரது வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருந்த போது, பார்வதி மற்றும் கமருதீனை தொலைக்காட்சியில் காட்டும் போது ஷூவால் அடிப்பது போல செய்கிறார். இது மட்டும் இல்லாமல், தனது டிவி உடைந்தாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கார் டாஸ்க் தொடங்கிய சிறுது நேரத்தில் கமருதீன், சான்ட்ராவை நோக்கி ஸ்கேம்ன்ட்ரா என்று கூறினார். அடுத்து கமருதீனை சான்ட்ரா, காமருதீன் என்று கூறினார். அவர்களுக்கு இடையில் நடந்த வாக்கு வாதத்தில் பார்வதி உள்ளே நுழைந்து வார்த்தைகளை விட, அது பெரிய சண்டையாக மாறியது. ஒரு கட்டத்தில் பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து சான்ட்ராவை காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளிவிட்டனர். வாக்குவாதம் நடந்ததில் முதலில் பிரச்னையை ஆரம்பித்தவர் கமருதீன் தான் என்றாலும், சான்ட்ராவும் வார்த்தைகளை விட்டிருக்க கூடாது.

Bigg Boss Tamil 9 Fans Beats VJ Parvathy and Kamarudin Video With Shoes - Watch

அதிர்ச்சி: ஆனால், பார்வதி மற்றும் கமருதீன் சான்ட்ராவை தள்ளிவிட்டுவிட்டு, காரில் இருந்து தள்ளிவிட்டதற்கு இவ்வளவு சீன் போடுறாங்க என்று கூறுகிறார்கள். சான்ட்ராவுக்கு வலிப்பு வந்த போது, அதையும் நடிப்பு என்று கூறுகிறார்கள். அதன் பின்னரும் தொடர்ந்து கேவலமாக பேசி வந்தார்கள். இவர்களின் இந்த செயல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

செருப்பால் அடிக்கும் ரசிகர்கள்: இதனால் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பார்வதி மற்றும் கமருதீனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் போது, ரசிகர் ஒருவர் தனது வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போது, பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோர் தொலைக்காட்சியில் காட்டும் போது, தனது ஷூவை எடுத்து இருவரையும் அடிக்கிறார். அப்போது தனது டிவி உடைந்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Bigg Boss Tamil 9 Fans Beats VJ Parvathy and Kamarudin Video With Shoes - Watch

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X