திவ்யாவுக்கு சும்மா ஒன்னும் டைட்டிலை தூக்கி கொடுக்கல.. பார்வதியை அந்த கிழி கிழித்த தான் தரமோ தரம்
சென்னை: கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. டாப் 4 போட்டியாளர்களை வரவேற்க தயாராக இருந்த பிக்பாஸ் இறுதி மேடையில், திவ்யா கணேஷ் டைட்டிலை வென்றுள்ளார். இந்த சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கிய திவ்யா கணேஷ் டைட்டிலை வென்றுள்ளார் என்றால் அவரது ஆட்டம் அந்த அளவுக்கு இருந்தது என்று சொன்னால் அது பொருத்தமானதுதான்.
வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கிய திவ்யா சக போட்டியாளர்கள் அனைவரையும் விளாசினார் என்று சொல்வதைக் காட்டிலும் அன்பு பாராட்டிய அதே நேரத்தில் அவர்களின் தவறை முகத்திற்கு நேராக சுட்டிக் காட்டி உள்ளார். தன்னுடன் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கிய சாண்ட்ராவுடன் இணைந்து தொடக்கத்தில் ரசிகர்களை கோபமேற்றும் செயல்களைச் செய்தாலும், ஆனாலும் அடுத்த வாரத்தில் இருந்தே தனது நடவடிக்கைகள் தொடங்கி, ஆட்டத்தை அணுகும் முறை வரை என எல்லாவற்றையும் மாற்றினார்.
திவ்யா எல்லா போட்டியாளர்களின் தவறைச் சுட்டிக் காட்டினாலும், பார்வதியின் அடாவடித்தனத்தை பார்த்து தயங்காமல், எதிர்த்து கேள்வி கேட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் விளாசிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் டிக்கெட் டூ ஃபினாலேவில் கார் டாஸ்கில் பார்வதி மற்றும் கமருதீன் இணைந்து சாண்ட்ராவை எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளினார்கள்.

திவ்யா கணேஷ் தைரியம்: இந்த சம்பவத்திற்குப் பிறகு பார்வதியை கடுமையாக விமர்சித்தார் திவ்யா. அதுவும் பார்வதியால் ஒரு கட்டத்திற்கு மேல் வாயே திறக்க முடியவில்லை என்று கூறும் அளவுக்கு போட்டு கிழி கிழி என கிழித்துத் தொங்க விட்டார் என்றுதான் கூறவேண்டும். இத்தனைக்கும் அப்போது திவ்யா மாதவிடாயால் அவதிப்பட்டு வந்தார். அப்படி இருந்தும் திவ்யா கணேஷ் தன்னால் முடிந்த வரை அந்த டாஸ்க்கில் பங்கேற்று அசத்தினார்.
பார்வதியை விளாசியது: அதேபோல் அந்த வாரத்தின் இறுதியில் விஜய் சேதுபதியிடம் பேசும்போது பார்வதி, திவ்யாவை உதாசினப்படுத்தும் வகையில் பேசவே, இதற்கு மேல் அவர்கள் இருவரையும் வீட்டிற்குள் இருக்க விடக்கூடாது என்று ரெட் கார்டு காட்டி பார்வதி மற்றும் கமருதீன் வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் பார்வதியை நோக்கி ஏய் வெளியே போ என்று அதட்டினார். அதேபோல் கமருதீன் வெளியே போகும் போது, பார்வதியின் பழக்கத்தை இத்துடன் விட்டு விடு என்று சொன்னார் திவ்யா. இப்படி திவ்யாவின் பல செயல்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்ல முடியும் என்றாலும், பார்வதியை விளாசியது டாப் என்று கூறலாம். இவர் டைட்டிலை வெல்ல முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த செயல்பாடு என்றும் கூறலாம்.


Click it and Unblock the Notifications











