சான்ட்ராவை எட்டி உதைத்த பார்வதி கமருதீன்.. டைட்டிலை தூக்கி கொடுக்கலாம்னு பிளானா விஜய் சேதுபதி?
சென்னை: இந்த சீசனை மொத்தமாகவே மானக்கேடான சீசனாக மாற்றியதில் பார்வதியும் கமருதீனுக்கும் பெரும் பங்கு உண்டு. இதில் அவர்கள் இருவரும் நேற்றைய எபிசோடில் நடந்து கொண்ட விதம் மொத்த பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கார் டாஸ்க்கில் சான்ட்ராவை காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளினர். இது பார்ப்பதற்கே மிகவும் பதற்றத்தைக் கொடுத்தது. இந்த விஷயத்தை விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவார் என்பதில் சந்தேகம் வேண்டாம் என்றாலும், ரசிகர்கள் பலர் மத்தியில் இந்த மோசமான சம்பவம் தொடர்பாக பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை பார்வதி ஏதாவது பிரச்னைகளை செய்து கொண்டிருக்கிறார். இவர் உருவாக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டால் தலை சுற்றலே வந்துவிடும் என்று கூறும் அளவுக்கு இருக்கும். பார்வதியோடு ஒப்பிடுகையில் கமருதீன் கொஞ்சம் குறைவான அளவுக்கு பிரச்னைகளை உருவாக்குபவர் தான் என்றாலும், இருவரும் இணைந்து தற்போது செய்துள்ள விஷயம் மிகவும் மோசமானது.

காருக்குள் அமைதியாக இருந்த சான்ட்ராவை முதலில் வம்புக்கு இழுத்தது கமருதீன் தான். அதன் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கமருதீனின் காதலி என்று சொல்லிக் கொள்ளும் பார்வதி உள்ளே நுழைந்து, சான்ட்ராவை தாக்கிப் பேசினார். இதையடுத்து சான்ட்ரா பார்வதியையும் தாக்கிப் பேசினார். மூவரும் மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர், இதை சக போட்டியாளர்கள் கண்டிக்கவும் செய்தனர்.
பார்வதியும் கமருதீனும் இணைந்து சான்ட்ராவை காரில் இருந்து கீழே தள்ளிவிட திட்டம் போட்டு, அதற்கான முயற்சிகளில் இறங்கினர். இதை சக போட்டியாளர்கள் கண்டித்தனர். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல், சான்ட்ராவை எட்டி உதைத்து, கீழே தள்ளிவிட்டனர். காருக்குள் இருக்க வேண்டும் என சான்ட்ரா தனது மொத்த பலத்தையும் போட்டு முயற்சித்தனர். ஆனால் பார்வதி முதலில் எட்டி உதைப்பதை பார்த்து, கமருதீனும் இணைந்து சான்ட்ராவை எட்டி உதைத்தார்.

சான்ட்ரா கீழே விழுந்த பின்னர் ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேறிய விக்ரம், சான்ட்ராவுக்கு உதவ முயற்சித்தார். ஆனால் சான்ட்ராவுக்கு வலிப்பு வந்தது போல ஆகவே, காருக்குள் இருந்த சபரி மற்றும் கானா வினோத் உடனே கீழே இறங்கி, சான்ட்ராவைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி மருத்துவர்களை வரவழைத்தனர்.
பார்வதி - கமருதீன்: இதில் சான்ட்ராவை உதைக்கும் போது, கோபப்பட்ட சபரி, கில்லர் காயின் நேற்று என்னையும் தான் அனைவரும் போட்டு அமுக்கினார்கள் என்று கூற, பார்வதி நான் உன்னை அமுக்கவில்லை என்று தெரிவித்ததோடு, தன்னை ஐந்து பேர் இணைந்து என்னை அமுக்கினார்கள். அது சரி என்றால் இதுவும் சரிதான் என்று வாதிடுகிறார். பார்வதி தனக்கும் கமருதீனுக்கும் நடந்தது அநியாயம் என்றால், சபரிக்கு நடக்கும் போது அதை தடுக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்தார் பார்வதி. ஆனால் தனது காதலன் என்று சொல்லிக் கொள்ளும் கமருதீனை போட்டு அனைவரும் அமுக்கும் போது பார்வதி தடுத்தார். பார்வதியின் இந்த அணுகுமுறையை சக போட்டியாளர்களே கேள்வி எழுப்பினர்.

விஜய் சேதுபதி: சான்ட்ராவை காரில் இருந்து எட்டி உதைத்தது தொடர்பாக விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவார், அடுத்து திட்டுவார், நாங்கள் தள்ளி தான் விட்டோம், காலை வைத்து அழுத்தம் கொடுத்தேன், உதைக்க வில்லை என்று கூறுவார்கள். உடனே சாட்சிக்கு சக போட்டியாளர்களை அழைப்பார். அடுத்து கூடுதலாக திட்டுவார். அதற்கு அடுத்து, பார்வதியும் கமருதீனும் நாங்கள் செய்தது தவறுதான், சான்ட்ரா மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள். சான்ட்ராவை காரில் இருந்து உதைத்து தள்ளி விட்ட பின்னர், சான்ட்ராவுக்கு வலிப்பு வந்துவிட்டது. இதைப் பார்த்த கமருதீனோ, காரில் இருந்து தள்ளிவிட்டதற்கு உலகமகா நடிப்பு என்று கூறுகிறார். சான்ட்ராவை வினோத், விக்கல்ஸ் விக்ரம், சபரி தூக்கிக் கொண்டு ஓடும்போது, பார்வதியை திட்டிய சுபிக்ஷா மற்றும் திவ்யாவிடம், மெடிக்கல் டீம் இருக்கிறார்கள் என்று பதில் அளிக்கிறார் பார்வதி.
வாடிக்கை: இதுதான் நடக்கப் போகிறது என்று விமர்சிக்கும் ரசிகர்களை பார்க்க முடிகிறது. முதல் வாரத்தில் தவறு செய்தார், தொடர்ந்து சில வாரங்கள் தவறு செய்தார் என்றால் அவற்றை சொல்லித் திருத்தும் போது அவர்கள் மன்னிப்பு கேட்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது, புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 13வது வாரம் வரை தொடர்ந்து பிரச்னைகளைச் செய்வது, குறிப்பாக தவறுகள் செய்வதும், அடுத்து பஞ்சாயத்து பேசும் போது மன்னிப்பு கேட்பதும் என ஒரு வாடிக்கையாகவே பார்வதி செய்து வருகிறார் என்றால், இதை என்னவென்று கூறுவது?.
என்ன மாற்றம்?: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியில் இத்தனை வாரங்கள் பயணித்துள்ளார் என்றால், இந்த பயணம் அவரது வாழ்க்கையில் குறிப்பாக தனிப்பட்ட முறையில் சில குணநலன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும்; அதை போட்டியாளர்கள் உணர்வது போல ரசிகர்களுமே கூட உணர்ந்து பாராட்டுவார்கள். ஆனால் பார்வதியிடம் அப்படியான மாற்றம் தெரிந்ததாக தெரியவில்லை. பார்வதிக்கு பதிலாக வேறு யாராவது போட்டியாளராக களமிறக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

டைட்டில்: ஏற்கனவே பார்வதி மற்றும் கமருதீனின் நடவடிக்கைகளுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுப்பது கொடுக்காமல் போவது என்பது பிக்பாஸ் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றாலும், அவர்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுக்கு என்ன பிரதிபலன் கிடைக்கப்போகிறது? இருவருக்கும் டைட்டிலை தூக்கி கொடுத்து அழகு பார்க்கப் போகிறீர்களா விஜய் சேதுபது என்று கேள்வி எழுப்பும் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











