'கிறுக்கன்'.. யாரைச் சொல்றாங்க.. பார்வதி - கமருதீனுக்கு பிரைவசி வேண்டும் என்றால் வெளியே அனுப்புங்க

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9, இந்த வாரத்துடன் 10வது வாரம் சென்று கொண்டுள்ளது. இன்னும் 5 வாரங்கள் மட்டுமே போட்டி உள்ளது என்பதால் வரும் வாரங்களில் டபுள் எவிக்‌ஷன் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்படி இருக்கும்போது கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் விதிகளை பின்பற்றாமல் நடந்து கொள்ளும் பார்வதி மற்றும் கமருதீனால் மொத்த வீடுமே தற்போது தண்டனைகளையும் சிரமங்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களால் மொத்த வீடும் சிரமத்திற்கு ஆளாகிறது எனும்போது அதை சக போட்டியாளர்கள் வெளிப்படுத்தும் போது, அவர்களை கிறுக்கன் என்று விமர்சிக்கிறார் பார்வதி. அதற்கு ஆமாம் போட்டுக் கொண்டு இருக்கிறார் கமருதீன். இவர்களின் இந்த நடவடிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கி உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பார்வதி மற்றும் கமருதீன் என இருவரும் மைக்கை பின்னால் தள்ளிவிட்டு பேசுவதும், மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசுவதுமாக இருந்தார்கள். இதை முதல் முறை பிக் பாஸ் எச்சரித்தார். இவர்களின் இந்த செயலை சக போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களுமே தெரியாமல் நடந்தது என்று நினைத்தார்கள். ஆனால் இவர்கள் தொடர்ந்து அதைச் செய்து வரும்போது இவர்கள் இருவர் மீதும் எரிச்சலும் கோபமும் தான் வந்துள்ளது.

Bigg Boss Tamil 9 Fans Slams VJ Parvathy and Kamrudhin For No Guilt No Respect No Game Ethics - Watch

இவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளும் போது எல்லாம் இருவரையும் பிக்பாஸ் கண்டித்துள்ளார். இருவரும் உடனே திருந்தி விட்டார்கள் என்பது போல "Sorry" சொல்லிவிட்டு, மீண்டும் அதே தவறை செய்கிறார்கள். இவர்களின் இந்த நடவடிக்கை இந்த வாரத்திலும் நடைபெற்று வருகிறது. இதனால் கடுப்பான பிக் பாஸ், வீட்டில் இருந்த பால், முட்டை, காபி தூள், டீ தூள் உள்ளிட்ட அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். கமருதீன் மற்றும் பார்வதி செய்த தவறுக்காக மொத்த வீட்டாருமே தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

நாடக மன்னிப்பு: பிக்பாஸ் பொருட்களை திரும்பப் பெற்றதும் மன்னிப்பு கேட்டார் பார்வதி. அதன் பின்னர் டீ குடிக்க முடியாமல் செய்து விட்டீர்களே என்று விக்கல்ஸ் விக்ரம் கமருதீனிடம் கூறியுள்ளார். இதை கமருதீன் பார்வதியிடம் கூற, உடனே பார்வதி," அவன் கெடக்குறான் கிறுக்கன்" என்று கூறுகிறார். அவரது இந்த பேச்சு ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பார்வதியின் இந்த நடவடிக்கை என்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. இவர்கள் செய்த தவறால் தாங்களும் தண்டனையை அனுபவித்து வருகிறோம் என்று சக போட்டியாளர் சொல்வதை கேட்க முடியாமல் மோசமாக விமர்சிக்கிறார். அப்படியானால் அவர் பிக் பாஸ் மற்றும் சக போட்டியாளர்களிடம் கேட்ட மன்னிப்பு என்பது நாடக மன்னிப்பா என்று கேள்வி எழுகிறது.

வெளியே அனுப்புங்க: ஆனால் பிக்பாஸ் பலமுறை மைக்கை சரியாக போடுங்கள் என்று சொன்னபோதும் பார்வதியும் கமருதீனும் மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை தானே செய்தார்கள். அப்படி இருக்கும்போது பிக் பாஸ்க்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும். ஆனால் அவர் இவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் விமர்சிக்கவில்லையே? இவர்கள் இருவருக்கும் அந்த அளவுக்கு பிரைவசி தேவை படுகிறது என்றால், தயவு செய்து அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறலாமே? அல்லது பிக்பாஸ் விதிகளை தொடர்ந்து மீறிய இருவரையும் வெளியேற்றலாமே? இவர்கள் இருவரையும் வெளியேற்றுவதால் சீசனுக்கு கெட்டப் பெயர் வந்துவிடுமோ என்று பிக் பாஸ் தரப்பில் யோசிக்கிறீர்களா? இதற்கு மேல் இந்த சீசன் கெட்டப் பெயர் வாங்கவோ, டேமேஜ் ஆகவோ எதுவும் இல்லை. அதேபோல் சக போட்டியாளர்களை விமர்சிக்கும்போது என்ன மாதிரியான வளர்ப்பு இது என்று கேள்வி கேட்ட கம்ருதீன் இப்போது ஒருமுறை பலமுறை எச்சரித்தும் பிக்பாஸ் விதிகளை காற்றில் பறக்கவிட்டு இருக்கிறார்.

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதி சொன்னாலும் கேட்க மாட்டார்கள், பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார்கள், சக போட்டியாளர்கள் சொன்னால் அவர்களை கேவலமாக விமர்சிப்பார்கள், இப்படி இருக்கும்போது இவர்கள் இருவரும் அந்த வீட்டின் விதிமுறைகளை பின்பற்ற மறுக்கிறார்கள் என்றால், இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு என்ன சுற்றுலா சென்றார்களா? இருவருக்கும் சம்பளத்தை கொடுக்காமல் வெளியே அனுப்புங்கள் என்று பதிவிடும் இணையவாசிகளின் பதிவுகளையும் பார்க்க முடிகிறது. இதற்கு மேல் பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதிக்கு தான் வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X