Bigg Boss Eviction: இந்த வாரத்தில் 2 விக்கெட்டைத் தூக்கிய பிக் பாஸ்.. யார் யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகி இருந்தாலும், இந்த வாரம் தான் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைமெண்ட் கிடைத்த வாரமாக இருந்தது. பிக் சீசனில் முந்தைய சீசன் போட்டியாளர்களான பிரியங்கா, மஞ்சரி மற்றும் தீபக் ஆகியோர் ஹோட்டல் டாஸ்க்கில் விருந்தினர்களாக களமிறங்கியது தொடங்கி, சாண்ட்ரா எமி-க்கு சீக்ரெட் டாஸ்க் கொடுத்தது, அதற்கு முன்னர் பிரஜன், கமருதீன், பிரவீன் இணைந்து விளையாட்டாக நடத்திய சண்டை நாடகம் என அனைத்தும் இந்த வாரத்தில் கலை கட்டியது.
இப்படி இருக்கையில் இந்த வாரத்தில் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷனைச் சந்தித்தனர். கடந்த வாரத்திலேயே இருவரை எலிமினேட் செய்ய வேண்டியதாக கூறிய நிலையில், கடைசியாக ஒருவரை மட்டும் எலிமினேட் செய்வதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த வாரத்தில் அதிகப்படியான போட்டியாளர்கள் நாமினேஷனைச் சந்தித்தனர். வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை தவிர, ஏற்கனவே உள்ள போட்டியாளர்களில் கனி திரு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றதால் அவர் நாமினேஷனைச் சந்திக்கவில்லை. அதேபோல் அரோரா மற்றும் சுபிக்ஷாவை யாரும் நாமினேட் செய்யாததால் அவர்கள் இருவரும் நாமினேஷனைச் சந்திக்கவில்லை.

இந்நிலையில் இந்த வாரத்திற்கு தர்பூசணி திவாகர், பார்வதி, கானா வினோத், கெமி, கமருதீன், பிரவீன், துஷார், எஃப்.ஜே. , ரம்யா, சபரி, விக்ரம், வியானா என இவர்கள் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர். இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் இரண்டு எலிமினேஷன்கள் இருக்கும் என்று ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த வாரத்தில் யார் யாரெல்லாம் எலிமினேட் ஆக உள்ளார்கள் என்ற தகவல் கசியத் தொடங்கி உள்ளது.
ரம்யா - துஷார்: போட்டியாளர்கள் துஷார் மற்றும் ரம்யா ஜோ ஆகியோர் இந்த வாரத்தில் எலிமினேட் ஆகி வெளியேற போகிறார்கள். இதில் என்னவென்றால் ரம்யா ஜோ இந்த வாரத்தில் தான் லக்சுரி வீட்டில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். மேலும் துஷாருக்கு விஜய் சேதுபதி கடந்த சில வாரங்களாகவே பல அட்வைஸ்கள் கொடுத்தார். அவரும் இந்த வாரத்தில் தான் அரோராவுடன் இணைந்து பேச வேண்டாம், தேவை என்றால், டாஸ்க்கிற்காக பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார்.

டபுள் எவிக்ஷன்: இந்த வாரத்தில் தான் அவர் சில இடங்களில் நன்றாக தெரியத் தொடங்கினார். இப்படி இருக்கையில், இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சு தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இது ரம்யா ஜோ ரசிகர்களையும் துஷார் ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications