இருக்குற பஞ்சாயத்து போதாதுனு.. பிக் பாஸே பத்தவெச்ச புது பஞ்சாயத்து.. நல்லா இருக்குங்க உங்க ஆட்டம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே தற்போது நடைபெற்றுக் கொண்டு உள்ள 9வது சீசன் தான் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை குறிப்பாக எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. இப்படி இருக்கும்போது இந்த சீசனில் போட்டியாளர்கள் கத்திக் கொண்டே இருக்கிறார்கள், சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் விமர்சனமாக இருக்கும். ஏற்கனவே தீராத சண்டைகளுடன் செல்லும் இந்த சீசனில் பிக் பாஸ் தனது பங்கிற்கு புது பிரச்னையை இழுத்து விட்டுள்ளனர்.

அதாவது போட்டியாளர்கள் விக்கல்ஸ் விக்ரம், கனி திரு மற்றும் அமித் ஆகியோரை அழைத்து அவர்கள் மூவருக்கும் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். அதாவது வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் கடந்த ஐந்து வாரங்களில் எப்படி ஆட்டத்தை ஆடியுள்ளார்கள் என்பதை மனதில் வைத்தும் வைல்ட் கார்டில் உள்ளே வந்த போட்டியாளர்கள் கடந்த 10 நாட்களுக்குள் எப்படி ஆடியுள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு அவர்களை ஒன்று முதல் 14 வரை வரிசைப் படுத்த சொல்லி உள்ளார்.

Bigg Boss Tamil 9 Fight Between Contestants After Ranking Task Day 39 Promo Goes Trending
Photo Credit:

ரேங்கிங் டாஸ்க்: இப்படி இருக்கையில் இவர்களும் இந்த வில்லங்கமான டாஸ்க்கை ஏற்றுக் கொண்டு, போட்டியாளர்களை ஒன்று முதல் 14 வரை வரிசையாக நிற்க வைத்தனர். இதில் சபரி, சுபிக்‌ஷா, கெமி, சாண்ட்ரா, பிரஜன், வியானா, அரோரா, ரம்யா, திவ்யா கணேஷ், கமருதீன், கானா வினோத், எஃப்.ஜே., பார்வதி மற்றும் தர்பூசணி திவாகர் என்ற முறையில் போட்டியாளர்களை வரிசைப்படுத்தி உள்ளனர். மேலும் இது தொடர்பாக டாஸ்க் லெட்டரை படிக்கும்போது, யார் இந்த வீட்டில் மிகவும் அறிவு முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார்கள் என்பதில் தொடங்கி, சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டவர்கள் வரை என்ற முறையில் வரிசைப் படுத்தவும் சொல்லி உள்ளார்.

சண்டைக்கு போன பார்வதி - ரம்யா - வியானா: இதில் 13வது இடத்தில் இருக்கும் பார்வதி, என்னால் இந்த 13 வது இடத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகிறார். அதேபோல், ரம்யாவோ, நீங்க மூன்று பேரும் யார் எங்களை முடிவு செய்ய என்று கோபமாக கேட்கிறார். தர்பூசணி திவாகரோ, இவங்களுக்கு ( கனி திரு, விக்கல்ஸ் விக்ரம், அமித்) வேண்டியவர்களுக்கு முதல் ஐந்து இடம் என்று கத்துகிறார். அதேபோல் வியானாவும் முதல் மூன்று இடத்தில் நீங்கள் வரிசைப் படுத்தி உள்ளவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. திவ்யா ஒரு படி மேலே சென்று அவர்கள் மூன்று பேரும் நடுவர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என்று கூறுகிறார்.

Bigg Boss Tamil 9 Fight Between Contestants After Ranking Task Day 39 Promo Goes Trending
Photo Credit:

ரசிகர்கள் அபிப்ராயம்: ஏற்கனவே வீட்டில் 1008 பிரச்னை போய்க்கொண்டு உள்ளது. இப்படி இருக்கும்போது பிக் பாஸ் இப்படியான ஒரு டாஸ்க்கை கொடுத்து போட்டியாளர்களுக்கு இடையில் புது பிரச்னையை உருவாக்கி விட்டாரே என்று ரசிகர்கள் சிலர் சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில் பிக் பாஸ் இந்த டாஸ்க்கை சில வாரங்களுக்கு முன்னரே செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கருத்துக்கள் வருவதையும் பார்க்க முடிகிறது. இதில் பார்வதிக்கும் தர்பூசணி திவாகருக்கு கடைசி இரண்டு இடங்கள் கொடுத்ததற்கு பாராட்டுக்களையும் சபரிக்கு முதல் இடம் கொடுத்ததற்கு கடுமையான விமர்சனங்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X