Bigg Boss: நான் போய் தூக்குல தொங்குறேன்.. பார்வதியோடு சண்டை போட்ட பின் விக்கல் விக்ரம் கண்ணீர்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் அடாவடியான போட்டியாளர் என்று ரசிகர்களால் சொல்லப்படும் போட்டியாளர் வி.ஜே.பார்வதி. அவர் சண்டை போடாத போட்டியாளர்கள் என்று அந்த வீட்டிற்குள் யாருமே இல்லை. முதல் வாரத்தில் வெளியேறிய பிரவீன் காந்தி தொடங்கி, வைல்ட் கார்டில் உள்ளே வந்த நான்கு போட்டியளர்கள் என அனைவருடனும் சண்டை போட்டுள்ளார். இதில் போதா குறைக்கு அவ்வப்போது பிக் பாஸ் சொல்வதையே மதிக்காமல் இருந்தார். சில வாரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி ரெய்டு விட்டதால் பிக் பாஸ் பேச்சை மட்டுமாவது கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இந்த வாரத்தில் பார்வதி அடிக்கடி சண்டை போடும் போட்டியாளர் என்றால் அது விக்கல்ஸ் விக்ரம் தான்.

இந்த வாரம் தொடங்கியதிலிருந்தே விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பார்வதிக்கு சண்டை தீரவில்லை. விக்கல் விக்ரமை, வக்ரம் பிடித்த விக்ரம் என்று விமர்சித்தது, அதன் பின்னர் இருவரும் கானா சாம்ராஜ்யத்தின் மன்னனாக விக்ரமும், தர்பீஸ் சாம்ராஜ்யத்தின் ராணியாக பார்வதியையும் எதிரெதிரே அமர வைத்து பிக் பாஸ் தரப்பில் தங்கள் வேலையை சிறப்பாக செய்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பார்வதிக்கு இடையில் பிரச்னை மேலும் அதிகரித்தது.

Bigg Boss Tamil 9 Fight Between Vikkals Vikram and VJ Parvathy Video Goes Tredning On Social

பார்வதி - விக்கல்ஸ் விக்ரம்: பார்வதி ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும் போது எப்போதும் அவரே அதில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாரோ என்று ரசிகர்களே கேள்வி எழுப்பும் அளவுக்கு, எதிரில் வாக்குவாதம் செய்யும் நபர் அமைதியான பின்னரும் சுமார் 10 நிமிடத்திற்கு கத்திக் கொண்டே இருக்கிறார். இந்த வீட்டில் பார்வதி பல்பு வாங்கிக் கொண்டு இருப்பது விக்கல்ஸ் விக்ரமிடம் தான். காரணம் விக்ரம் தனது குரலை மாற்றி, உடலை அசைத்து பார்வதிக்கு பதில் அளிப்பதால், பார்வதியால் இப்படியான எதிர்வினையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே தான் பார்வதி மிகவும் கோபமடைகிறார்.

தூக்கில் தொங்குறேன்: ரேங்கிங் டாஸ்க்கில் பார்வதியை 13வது இடத்தில் நிறுத்தி விட்டதால் பார்வதி மேலும் கடுப்பாக, விக்கல்ஸ் விக்ரமுடன் மீண்டும் சண்டை. அப்போது விக்ரமைப் பார்த்து, பயமா விக்ரம் என்று கேட்க, உடனே விக்ரமோ தனது குரலை மாற்றிப் பேசினார். அதாவது, " ஆமாம் எனக்கு பயம், பார்வதியைப் பார்த்து பயம், நான் ஒரு கோழை, நான் போய் தூக்கில் தொங்குகிறேன் என்று ட்ரோல் செய்யும் குரலில் பேசிக் கொண்டே போகிறார். கடைசியாக போடி என்று கத்துகிறார் விக்ரம். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிலர் விக்கல்ஸ் விக்ரமின் இந்த பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் பாராட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X