கமருதீனை அழைத்து அழகு பார்க்கிறீர்களா? எதுக்கு ரெட் கார்டு? எல்லாம் ப்ரீ ப்ளானா? கிழிக்கும் ரசிகர்கள்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் பல பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விட டாப் என்று சொன்னால் அது கமருதீன் மற்றும் பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்தது தான். அப்படி இருக்கையில், கமருதீனை மீண்டும் பிக் பாஸின் இறுதி நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்கள். இது ரசிகர்களை ஆத்திரமூட்ட செய்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி என மொத்த பிக்பாஸ் டீமையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அதாவது, " இந்த நிகழ்ச்சி மீதான மரியாதையே போகிறது. இவர்களை இப்படி மேடை ஏற்றி அழகு பார்ப்பீர்கள் என்றால், அப்புறம் எதற்காக அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தீர்கள்? இவங்களே ரெட் கார்டு கொடுப்பாங்களாம் அப்புறம் இவங்களே கூட்டிட்டு வருவாங்களாம்?

விஜய் தொலைக்காட்சி இப்படியான நபர்களை இப்படி மேடை ஏற்றி அழகு பார்ப்பதை எப்போதுதான் நிறுத்துமோ? அதுவும் அவர்களை மகாத்மா போல நடத்துவார்கள். கேவலமான தருணம். சேனல் திருத்திக்கொள்ள வேண்டும். ரெட் கார்டுக்கு மரியாதை தரவேண்டும். கமருதீனை மேடை ஏற்றி உள்ளது எல்லாம், கன்றாவி. இது போன்ற மோசமான நபர்களை மேடை ஏற்றி அழகு பார்பதற்கு விஜய் டிவி வெட்கப்பட வேண்டும்.

Bigg Boss Tamil 9 Finale Fans Slams Bigg Boss And Vijay Sethupathi For Staging VJ Parvathy And Kamrudin

உங்க அம்மா & அக்காவுக்கு: சாண்ட்ரா மீது விமர்சனங்கள் இருந்தாலும், கமருதீனை மேடை ஏற்றி, அவருக்கு கைதட்டல்கள் எல்லாம் கொடுப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. உங்கள் வீட்டில் அக்காவுக்கோ, தங்கைக்கோ, அம்மாவுக்கோ இப்படி நடந்தால், அவர்களை காயப்படுத்தியவரை மேடைக்கு அழைத்து வந்து இப்படி அழகு பார்ப்பீர்களா? அவர்கள் நடிகர்கள், அவர்களுக்கும் எதிர்காலம் உள்ளது என்பதை புரிந்து கொள்கிறேன்.

ஆவேச விளாசல்: இந்த சீசனின் இறுதிப் போட்டியில் சரியான ஜோக் இதுதான். இவங்களே பாம் வைப்பாங்களாம், அதற்கு பிறகு இவங்களே எடுப்பாங்களாம். இப்போது கூட இவர்களின் டி.ஆர்.பிக்கு பார்வதி மற்றும் கமருதீன் தேவைப்படுகிறார்கள்" என பல அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பலரும் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X