Bigg Boss: டைட்டில் எனும் கிரீடம் தான் இல்லை.. மத்தபடி சபரி தமிழ் மக்களின் மனதில் ராஜாதிராஜா தான்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்றுடன் அதாவது ஜனவரி 18ஆம் தேதியில் முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 106 நாட்கள் பயணம், 24 போட்டியாளர்கள் என இந்த சீசன் ஒரு பெரிய சீசனாகவே மாறிவிட்டது. இந்த சீசனில் டைட்டிலை திவ்யா கணேஷ் வென்றார். இரண்டாவது இடத்தை சபரிநாதன் பிடித்தார். இதில் திவ்யா கணேஷ் வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி கொடுத்தவர். அதேபோல், சபரிநாதன் இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து விளையாடி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். மேலும் இவருக்கு டைட்டில் இல்லை என்றாலும் ரசிகர்கள் இவரது மனிதாபிமானம், அன்பு, நல்ல எண்ணம், அனைவரையும் அரவணைக்கும் மனப்பான்மை என சபரியின் நல்ல குணநலன்கள் என்பது பலரும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி இருக்கையில் சபரி நாதனுக்கு டைட்டில் என்ற கிரீடம் இல்லை என்றாலும் அவர் தமிழ் மக்கள் மனதில் என்றைக்கும் ராஜாதிராஜா தான் என்று பாராட்டி வருகிறார்கள். சபரி மொத்தம் 106 நாட்கள் இருந்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 12,000 சம்பளம் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், மொத்தம் 106 நாட்களுக்கு ரூபாய் 12 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் சம்பளமாகப் பெறுவார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.



Click it and Unblock the Notifications











