Bigg Boss: இந்த சீசனுடன் ரிசைன் செய்துவிட்டு போகிறேன்.. விஜய் சேதுபதி இப்படி சொல்ல யார் காரணம்?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இன்று அதாவது ஜனவரி 18ஆம் தேதி இறுதி நாளில் ஃபினாலேவில் உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த சீசனில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்று ஆர்வமுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே வெளியான தகவலின் படி திவ்யா கணேஷ் தான் டைட்டிலை வெல்வார் என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த சீசன் போட்டியாளர்கள் இந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியிடம் அவர்கள் மனதில் உள்ள கேள்விகளைக் கேட்டனர்.

அப்போது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் விஜய் சேதுபதியிடம், நீங்கள் எப்படி சார் உங்கள் மீதான விமர்சனங்களை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதன் பின்னர் இந்த சீசனில் வீக் எண்ட்களில் தான் ரசிகர்கள் அதிகம் ஷோ பார்த்துள்ளர்கள். அதற்கு காரணம் நீங்கள் என்று தெரிவித்தார். இதைக் கேட்டதும் விஜய் சேதுபதியோ விளையாட்டாக, “ வாட்டர்மெலன் திவாகர் ஒத்துக் கொண்டுள்ளார், அவர் இல்லாத போதும் இந்த ஷோவை ரசிகர்கள் எனக்காக பார்த்துள்ளார்கள் என்று. எனக்கு இது போதும், நான் இந்த சீசன் உடன் ரிசைன் செய்துவிட்டு வெளியேறுகிறேன் என்று கூறினார். விஜய் சேதுபதி இவ்வாறு கூறியது பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











