பார்வதி டைட்டில் வின்னரா? FJவிடம் இருந்து இப்படி ஒரு ரியாக்ஷனா? கெட்ட வார்த்தை பேசுவாராம்
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இன்னும் சில வாரங்களில் டைட்டில் வின்னரை அறிவிக்க உள்ளார்கள். இப்படி இருக்கும்போது கடந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் எஃப்.ஜே. இவர் வெளியேறிய பின்னர், அவர் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேட்டியில் போட்டியாளர் பார்வதி குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
பிக்பாஸில் பார்வதி சண்டை போடாத போட்டியாளர்களே கிடையாது. அண்ணன், அண்ணன் என்று பார்வதி அன்போடு அழைத்து வந்த, தர்பூசணி திவாகரிடமும் சில நேரங்களில் சண்டைகள் வந்துள்ளது. இதில் இந்த வீட்டில் பாம்பும் கீரியுமாக இருந்தது போட்டியாளர்களான பார்வதியும் எஃப்.ஜேவும் தான். இப்படி இருக்கும்போது கடந்த வாரத்தில் வீட்டில் இருந்து வெளியேறிய FJ அளித்த பேட்டி தற்போது யூடியூபில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

FJ பேட்டி: அதில் பார்வதி தான் டைட்டில் வின்னராக வரப்போகிறார் என்று பலரும் சொல்லுகிறார்களே? என்ற கேள்வியைக் கேட்டது. உடனே " ச்சை" என்று சொல்லி முகத்தில் மோசமான் ரியாக்ஷன் ஒன்றையும் கொடுக்கிறார். உடனே என்னங்க உடனே இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்கறீர்கள்? அவர்தான் கேமர் என்று சொல்லுகிறார்களே என்று கேள்வி எழுப்பியதற்கு, அசிங்கமாக பேசலாமா? என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.
பார்வதி குறித்து கெட்டவார்த்தை: உடனே அவரை பேட்டி எடுத்துக் கொண்டு இருந்த யூடியூபர் மற்றும் பிக்பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல், இல்லை வேண்டாம் என்று தடுத்துவிட்டார். ஆனால் FJ நான் ஒரு கெட்டவார்த்தை பாரு என்று சொன்னார். இதைக் கேட்டதும் ஜோ மைக்கேல் அவரது பொருளை எடுத்து அவர்களையே போடுறீங்க என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் வீட்டில் இப்போது உள்ள போட்டியாளர்கள் குறித்தும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஆதிரை குறித்த கேள்விக்கும் அவரது தரப்பு பதிலும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











