பார்வதியையும் திவ்யாவையும் வாய்லயே அடிக்க சொன்ன கானா வினோத்.. ஆடியன்ஸ் மனசுல இருப்பதை சொல்லிட்டாரே!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 13வது வாரமான இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களும் டிக்கெட் டூ ஃபினாலேவை வென்று விட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். பிக்பாஸ் தரப்பில் போட்டிகளும் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஐந்தாவது டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது நடைபெற்ற சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதாவது டிக்கெட் டூ ஃபினாலேவின் ஐந்தாவது டாஸ்கில் பார்வதி வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்து திவ்யா இரண்டாவது இடத்தை பெற்றார். இதில் என்னவென்றால் இவர்கள் இருவரும் முதல் இடத்திற்காக அதாவது 9 மதிப்பெண்களுக்காக போராடிக் கொண்டு இருந்தார்கள். பார்ப்பதற்கு எளிமையான டாஸ்க் என்பது போல தோன்றினாலும், ஆனால் உண்மையிலேயே அது மிகவும் கடினமான டாஸ்க்கும் கூட.

இப்படி இருக்கும்போது, இவர்கள் இருவரும் தான் 9 மதிப்பெண்களுக்காக போராடிக் கொண்டு இருந்தார்கள். சக போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களுக்குமே இவர்கள் இருவரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார்கள். அதே நேரத்தில் இந்த டாஸ்க் விதிப்படி, போட்டியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள், போட்டியில் நீடிக்கும் போட்டியாளர்களை ஸ்மைலி பந்துகளை வைத்து அடித்து அவர்களை போட்டியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கலாம்.

Bigg Boss Tamil 9 Gana Vinoth Comedy Timing Counter Appreciated By Fans - Video

பார்வதி & திவ்யா: இப்படி இருக்கும்போது, கானா வினோத், திவ்யாவை ஸ்மைலி பந்துகளை வைத்து அடிக்கும் போது, திவ்யா தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்த கதவின் தாழ்ப்பாள் பூட்டிக் கொண்டது. உடனே அரோராவிடம் அதைச் சொல்லி திறக்கச் சொன்னார் திவ்யா. அதற்கு பார்வதியோ, பூட்டி இருக்கிறதா என்று வேகமாக கேட்டார். அதற்கு திவ்யா நடந்ததை சொன்னார். அதற்கடுத்து பார்வதியோ, பூட்டி இருக்கிறதா என்று தானே கேட்டேன். எதற்காக கோபப்படுகிறீர்கள் என்று கேட்கிறார். மேலும் காரம் அதிகம் சாப்பிட்டால் கோபம் அதிகம் வரும் போல என்று பார்வதி கூறினார்.

கானா வினோத்: அதற்கு திவ்யாவோ, நீங்களும் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடுங்கள் என்று கூறுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த கானா வினோத், கமருதீனை நோக்கி, " டேய்.. கொஞ்சம் வாயில அடிடா... பேசீட்டே இருக்காங்க" என்று கூறுகிறார். இந்த வீடியோவை மட்டும் கட் செய்து இணையத்தில் பகிர்ந்து வரும் பிக்பாஸ் ரசிகர்கள், கானா வினோத்தை பாராட்டி வருகிறார்கள். அதாவது ரசிகர்கள் மனதில் என்ன உள்ளதோ, அதை அப்படியே கானா வினோத் சொல்லிவிட்டார் என்று பாராட்டி வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 Gana Vinoth Comedy Timing Counter Appreciated By Fans - Video

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X