Bigg Boss: மேல்குடினு சொன்ன பிரவீன் காந்தி.. சட்டென சீறிய கானா வினோத்.. மனுஷன் பின்னுறாப்ள!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த வாரத்தில் பணப்பெட்டி வாரம் நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் இந்த வாரத்தில் மீண்டும் வீட்டிற்குள் வந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இயக்குநர் பிரவீன் காந்தி மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோர் கானா வினோத் இடம் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, இயக்குநர் பிரவீன் காந்தி, மேல்குடி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். ஒரு நொடி கூட தாமதப்படுத்தாத கானா வினோத், உடனே, அதை மட்டும் சொல்லாதீங்க, குடியில் மேல் குடி, கீழ் குடி என்று எதுவும் இல்லை, எல்லோரும் ஒரே குடி என்று கூறினார்.

இந்த சீசன் போட்டியாளர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் கானா வினோத். அவரது நேர்மையான ஆட்டம், டைமிங் காமெடி உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எவ்வளவு இக்கட்டான, கஷ்டமான சூழலாக இருந்தாலும் ஒரு நொடியில் செம காமெடியாக ஒரு வார்த்தையைச் சொல்லி அனைவரையும் கலகலப்பாக்கி விடுவார்.
பிரவீன் காந்தி: இப்படி இருக்கையில் நேற்றைய அதாவது ஜனவரி 6ஆம் தேதி எபிசோடில் வீட்டிற்குள் சென்ற பிரவீன் காந்தி மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோருடன் கானா வினோத் உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது பிரவீன் ராஜ் பேசுகையில், உங்களுக்கு என்னப்பா நீங்கள் 90க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த வீட்டிற்குள் இருந்து விட்டீர்கள் என்று கூறினார். உடனே பிரவீன் காந்தி மேல்குடி இவர்கள் எல்லாம் என்று கூறினார்.

வினோத் கோபம்: உடனே இடை மறித்த கானா வினோத், இங்கு மேல்குடி, கீழ் குடி என்று எதுவும் இல்லை. அனைவரும் ஒரே குடிதான் என்று கூறினார். கானா வினோத் இவ்வாறு கூறியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இணையவாசிகள் பலரும் அவர் பேசியதற்கு அவரை பாராட்டி வருகிறார்கள். கானா வினோத் அடிப்படையிலேயே சமூக அக்கறை கொண்ட ஒரு கானா பாடகர். இவரது கனா பாடல்கள் பலவும் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பேசி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


Click it and Unblock the Notifications











