Bigg Boss: இது தேவை தான்.. 3வது சீசன் போட்டியாளரை புகழ்ந்த பிக்பாஸ்.. கண்ணீர் விட்டு அழுத கானா வினோத்
சென்னை: நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 9 ரசிகர்களுக்கே கடுப்பு அடிக்கும் சீசனாக தான் சென்று கொண்டுள்ளது. அதில் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்களும் இருக்கிறார்கள். இருக்கின்ற போட்டியாளர்களில் கொஞ்சம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ள போட்டியாளர் என்றால் அதில் கானா வினோத்தும் ஒருவர். ஆனால் கானா வினோத்தும் அவ்வப்போது ரசிகர்களின் அதிருப்தியை பெற்று விடுகிறார். இப்படி இருக்கையில் பிக் இன்றைக்கு போட்டியாளர்கள் அனைவருக்கும் ரெய்டு விட்டார் பிக் பாஸ். அதில் கானா வினோத்துக்கும் ரெய்டு விழுந்தது. அப்போது மூன்றாவது சீசன் போட்டியாளர் ஒருவரை குறிப்பிட்டு பேசியதால் கானா வினோத் கண்ணீர் விட்டு அழுது விட்டார்.
இந்த சீசனில் இருக்க கூடிய போட்டியாளர்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற போட்டியாளர்கள் வெகு குறைவுதான். அதில் கானா வினோத் என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அவரது பாடல் பாடும் திறமையில் இருந்து, சக போட்டியாளர்களுடன் ஒற்றுமையாக பழகுவது தொடங்கி, மற்றவர்களை கலாய்க்கும் திறமை உள்ளிட்டவை மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. இவரும் தர்பூசணி திவாகரும் இணைந்து கொண்டு பேசினாலே சிரிப்புக்கு கேரண்டி என்று ரசிகர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். அதேபோல் பிக் பாஸ் தரப்பில் கொடுக்கப்படும் டாஸ்க் என்றாலும் சிறப்பாக விளையாடுகிறார்.

ஆனால் அவரிடத்தில் இருக்கும் பிரச்னை என்றால் கலாய்க்கும் போது கொஞ்சம் எல்லை மீறி கலாய்ப்பது. எதிரில் இருப்பவரின் மனம் புண்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் கலாய்க்கிறார். இது அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டாக வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் ரசிகர்களும் கூறுகிறார்கள். இப்படி இருக்கையில் இன்றைக்கு வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பிக் பாஸ் ரெய்டு விட்டு விளாசிவிட்டார்.
அழுத கானா வினோத்: அப்போது பிக் பாஸ் பேசும்போது, " நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு போகிறோம் எனும்போது கத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் அது அங்கேயே காலிதானே வினோத். கத்துவதும் நகைச்சுவையும் எப்படி ஒன்றாகப் போகும்? அப்போ சண்டைதான் வரும். உங்களிடம் நல்ல நையாண்டி தனம் இருக்கிறது. எனது சிஷ்யனின் நண்பர் தானே நீங்கள்? எனது சிஷ்யன் யார்? " என்று பிக் பாஸ் கேட்க, சாண்டி என்று பதில் அளித்தார் கானா வினோத். எனது சிஷ்யன் சண்டைக்கு போயுள்ளாரா? சிரிப்பை வரவழைக்க தவறியதில்லை என்று கூறுகிறார்.

சாண்டி மாஸ்டர்: இதைக் கேட்ட கானா வினோத் மனமுடைந்து அழுது விடுகிறார். உடனே பார்வதி கானா வினோத்துக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார். ஆனால் பிக் பாஸோ, அவர் அழுகட்டும் விடுங்கள் என்று கூறுகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சாண்டி மாஸ்டர் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர். கடந்த 8 சீசன்களில் சாண்டி மாஸ்டரின் சீசன் என்றைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்த சீசனில் இருந்த பாய்ஸ் டீம், சீசனில் வில்லியாகவே இருந்த வனிதா விஜயகுமார், சீக்ரெட் டாஸ்க்கில் இருந்த சேரன், பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்த கவின், பாதியில் வெளியேற்றப்பட்ட சித்தப்பா சரவணன் என அந்த மொத்த சீசனுமே என்றைக்கும் ரீ வாட்ச் வொர்த்துடைய சீசன்.


Click it and Unblock the Notifications











