Bigg Boss Tamil 9: குடிமகனே.. பெரும் குடிமகனே.. பிக் பாஸ் ஹோஸ்ட் விஜய் சேதுபதியை வச்சி செய்றாங்களே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 9ன் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதில் விஜய் சேதுபதி கெத்தாக நடந்து வரும் காட்சிகளைபார்த்து என்னடா டாஸ்மாக் போய் ஃபுல்லா குடிச்சிட்டு நடந்து வர மாதிரி இருக்கு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
இந்த சீசன் டைட்டில் வின்னராக விஜய் சேதுபதி அரோராவை தான் டைட்டில் வின்னர் ஆக்கப் போகிறார் என முன்னதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் ஓடிக்கொண்டிருந்தன. அரோராவுக்குத்தான் வெளியே மிகப்பெரிய பிஆர் டீம் வேலை பார்த்து வருவதாகவும் பலர் அவரை அட்டாக் செய்து வந்தனர்.

ஆனால், கடைசியில் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. திவ்யா கணேஷ் டைட்டிலை தட்டித் தூக்கும் அந்த தருணத்தை காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவரது கையை எப்படி பிடித்து விஜய் சேதுபதி தூக்கப் போறாரோ என மக்கள் செல்வனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
மாஸ் என்ட்ரி கொடுத்த மக்கள் செல்வன்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்துக்காக விஜய் சேதுபதி இந்த புதிய கெட்டப்பில் இருக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது படத்துக்கா என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சீசன் தொடக்கத்தில் மீசையே இல்லாத விஜய் சேதுபதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்து பல கெட்டப்புகளில் நிகழ்ச்சிகளை கடந்த 2 சீசன்களாக தொகுத்து வழங்கி வருபவர் தற்போது கிராண்ட் ஃபினாலேவுக்கான மாஸ் என்ட்ரி வீடியோ ப்ரோமோ வெளியான நிலையில், அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
ரெட் கார்டு கொடுத்தவங்களுக்கும் என்ட்ரி: பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட நிலையில், அவர் கிராண்ட் ஃபினாலேவில் பங்கேற்கவில்லை. ஆனால், பார்வதி, கமருதீனை கிராண்ட் ஃபினாலேவுக்கு விஜய் டிவி அழைத்திருப்பதாகவும் சர்ச்சைகள் வெடித்துள்ளன. கமல் தொகுத்து வழங்கும் போதே மகத் ரெட் கார்டு வாங்கிய நிலையில், கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்தார் என்றும் ரசிகர்கள் ஒப்பிட்டு விளக்க அளித்து வருகின்றனர்.
குடிமகனே பெரும் குடிமகனே: விஜய் சேதுபதியின் கிராண்ட் ஃபினாலே என்ட்ரி ப்ரோமோ வெளியான நிலையில், அதை அப்படியே "குடிமகனே பெரும் குடிமகனே" பாடலை சேர்த்துப் போட்டு விஜய் சேதுபதியை பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். டைட்டில் வின்னர் கையை இவர் தூக்குவாரா? அல்லது இவரை யாராவது தூக்குவார்களா? என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். வழக்கம் போல இந்த சீசன் கிராண்ட் ஃபினாலேவிலும் விஜய் சேதுபதி தனது கெத்தை காட்டுவார். அடுத்த சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்குவார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











