Bigg Boss: உலக அழகியும் கொ*லைகாரனும்.. திவ்யாவுக்கு ஷார்ப்பான ரிப்ளை கொடுத்த கமருதீன்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில்தான் அதாவது 5வது வாரத்தில் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வாரமாக மாறியுள்ளது. அதற்கு பிக் பாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட டாஸ்க் தான் மிகவும் முக்கியமான காரணம் என்றாலும் , இந்த சீசனைப் பொறுத்தவரையில் இந்த வாரத்தில் போட்டியாளர்களின் ஈடுபாட்டை பாராட்டியே ஆகவேண்டும். இப்படி இருக்கையில் கமருதீன் மற்றும் திவ்யா கணேஷ்க்கு இடையிலான பிரச்னை என்பது முதல் நாளில் இருந்தே இருக்கிறது. இந்நிலையில் லிவிங் ஏரியாவில் நடைபெற்ற டீம் மீட்டிங்கின் போது கமருதீன் திவ்யாவுக்கு அளித்துள்ள பதிலடியானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதாவது வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் போட்டியில் கலந்து கொண்டவர் திவ்யா கணேஷ். களமிறங்கிய முதல் வாரமே, கேப்டன் பதவிக்கு போட்டியிட்டு கேப்டனாகவும் அதாவது வீட்டுத் தலயாகவும் மாறினார். இவர் வீட்டிற்குள் வரும்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒழுக்கம் என்றால் என்ன? சபை நாகரீகம் என்றால் என்ன என்பதைச் சொல்லித் தரவேண்டும் என்று கூறினார். ஆனால் இவர் வீட்டிற்குள் வரும்போது சொன்னதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, வீட்டில் ஏற்கனவே காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கும் போட்டியாளர்களுடன் இணைந்து கொண்டு இவரும் கத்த ஆரம்பித்து விட்டார்.

கேப்டனாக மாறிய பின்னர், சக போட்டியாளர்களிடம் இவர் நடந்து கொண்ட விதம் என்பது ரசிகர்களுக்கே அதிருப்தி தான். துஷாரிடம் சண்டைக்குச் சென்றது முதல் விக்கல்ஸ் விக்ரம், பார்வதி உள்ளிட்டோரை உருவ கேலி செய்தது வரை போன்ற விஷயங்கள் என்பது ரசிகர்களுக்கு இவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.
சிரித்து பேசுங்க: இப்படி இருக்கையில் கம்ருதீன் லிவிங் ஏரியாவில் நடைபெற்ற டீம் மீட்டிங்கில் திவ்யா குறித்து பேசும்போது, " நீங்க எப்போதும் சிரிப்பதே கிடையாது. சிரித்து பேசினால் ரொம்பவும் நன்றாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயம் சொன்னால், ஏதோ கொலைகாரனைப் பார்ப்பது போல பார்த்து பேசுகிறீர்கள்" என்று கூறினார். ஆனால் கமருதீன் சொன்ன கொலைகாரன் என்ற வார்த்தை திவ்யாவுக்கு உலக அழகி என்று காதில் விழ, உடனே வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள், நான் உலக அழகிதான் என்று கூறினார்.
கொலைகாரன் - உலக அழகி: உடனே கம்ருதீனோ, நான் உலக அழகி என்று கூறவில்லை, கொலைகாரன் என்றுதான் கூறினேன் என்று கூற, அதற்கும் கொலைகாரன் என்ற வார்த்தையையும் பயன்படுத்த வேண்டாம் என்று கூற, உடனே கமருதீனோ முதலில் உலக அழகி என்ற வார்த்தை இப்போது கொலைகாரன் என்ற வார்த்தையா? என்று பதில் கேள்வி எழுப்பினார். இவர்களின் இந்த சண்டை என்பது பார்ப்பதற்கு, கமருதீன் என்ன சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும் என திவ்யா நினைக்கிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்த வாரம் முழுவதும் கமருதீன் , வீட்டுத் தல திவ்யாவுக்கு பல இடங்களில் தரமான ரிப்ளை கொடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











