கமருதீனுக்கு கட்டம் சரியில்லைனு போன வருசமே சொன்ன ஜோசியர்கள்.. என்னங்க அப்படியே நடந்திருக்கு - வீடியோ
சென்னை: பிக்பாஸ் சீசன் தமிழ் இல் 13 வாரங்கள் முடிந்து இன்றுடன் அதாவது ஜனவரி 5 ஆம் தேதியில் இருந்து 14 வது வாரம் தொடங்கவுள்ளது. தொடக்கத்தில் இருந்து இருக்கும் போட்டியாளர்கள், வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என மொத்தம் 25 போட்டியாளர்கள் களமிறங்கினர். எலிமினேஷன், விருப்பமாக வெளியேறியது, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது என எல்லாம் போல, தற்போது வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டும் தான் உள்ளனர். இதில் அரோரா மட்டும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இப்படி இருக்கும் வி.ஜே. பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்த போது பெரும்பான்மையான ரசிகர்கள் பட்டாளம் அதை வரவேற்றனர். சிலர் எல்லாம் கேக் வெட்டி, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்கிறார்கள். அதேபோல் இணையவாசிகள் மீம் கிரியேட் செய்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சி புத்தாண்டுக்கு முந்தைய நீயா நானா நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு இடையேயான உரையாடலாக அது இருந்தது. அதில் கமருதீனும் கலந்து கொண்டார். அப்போது ஜோதிடர்கள் பலரும், கமருதீன் சிம்ம ராசிக்காரர் என்பதால் சிம்ம ராசி உடையவர்களுக்கு 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து சொல்லி இருந்தனர்.
தற்போது அந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள், பிக்பாஸில் கமருதீன் சர்ச்சைக்குரிய வகையில் என்னவெல்லாம் செய்தார் உள்ளிட்ட வீடியோக்களை இணைத்து ஒரு வீடியோ மீமாக உருவாக்கி உள்ளார்கள். அதைப் பார்க்கும்போது, ஜோசியர்கள் ஏற்கனவே கட்டங்களை கணித்து எச்சரித்துள்ளனர். ஆனாலும் கமருதீன் உஷாராக இல்லாமல், இப்படி செய்துவிட்டாரே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதாவது, " அஷ்டம சனி வருவதால் வேலையில் பாதிப்பு, நண்பர்களுடன் பிரச்னை, கெட்ட சேர்க்கையால் ஏமாற்றம், இழப்பு, சில அவமானங்களை கொடுக்கலாம். பழகும் போது வார்த்தைப் பிரயோகங்கள் மிகவும் கவனம் அவசியம். முக்கியமாக காதலிப்பது மட்டும் இப்போது கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்கள்.

அதேபோல் 2026ஆம் ஆண்டுக்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலும் இது போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமூகத்திற்காக நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல நட்பு உள்ளிட்டவற்றை கெடுக்க கூடிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த ஆண்டிலும் சிம்ம ராசிக்கு பல பிரச்னைகள் வரும் என்று தெரிவித்துள்ளார்கள். இப்படியான நிலையில் கமருதீனுக்காக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











