Bigg Boss: பாருவைப் பார்க்காமல்.. வந்த வேலையைப் பாருடா தம்பி.. கமருதீனிடம் ஓபனாகவே பேசிய அக்கா!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்ட் செம ஜோராக போய்க்கொண்டு உள்ளது. இந்த சீசனில் இந்த வாரம் தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஜாலியான வாரமாக சென்று கொண்டு இருந்தது. இப்படி இருக்கும்போது, இன்றைய எபிசோடில் கமருதீனின் அக்கா, மச்சான் மற்றும் அவர்களின் குழந்தை என குடும்பமாக வந்துள்ளனர். இதில் கமருதீனைச் சந்தித்த அவரது அக்கா கொடுத்த சில அறிவுரைகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மொத்த போட்டியாளர்களில் பார்வதியின் குடும்பத்தினர் வீட்டில் 24 மணி நேரம் தங்கும் வாய்ப்பை வென்றுள்ளார். இதனால் பார்வதியின் அம்மா காலையிலேயே வந்துள்ளார். அதை அடுத்து வந்த கமருதீனின் அக்கா, மச்சான் மற்றும் அவர்களின் குழந்தை என மூவரும் வந்துள்ளனர். இந்நிலையில் கமருதீனின் அக்காவை வரவேற்றபோது பார்வதி, அக்கா வாங்க என்று கூறினார்.

Bigg Boss Tamil 9 Kamurudin Sister Passing Comment About VJ Parvathy BB Promo
Photo Credit:

பார்வதி - கமருதீன் அக்கா: பார்வதி இவ்வாறு அழைத்ததற்கு, காரணம், பார்வதியின் தாயாரும் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று பார்வதியின் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதை கவனித்த கமருதீனின் அக்கா, பார்வதியைப் பார்த்து, அக்காவா என்று கேட்டார். அதையடுத்து கமருதீனிடம் நீ இங்கு எதற்கு வந்தாயோ அதை செய் கமருதீன். அதை விட்டுவிட்டு தேவையில்லாத வேலைகளை செய்யாதே. வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையைத் தீர்மானிக்கும் இடம் இது கிடையாது. எனவே ஆட்டத்தில் கவனமாக இரு. நான் உள்ளே வரும்போது பார்வதி என்னை வாங்க அக்கா என்று சொல்லி வரவேற்றார். அதாவது தங்கச்சி, அதனால் உனக்கும் தங்கச்சி" என்று கூறுகிறார்.

திருமண பேச்சு: இவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதை பிக்பாஸ் தரப்பில் ப்ரோமோவாக வெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. பலரும் இன்னைக்கு சம்பவம் இருக்கு. பார்வதியின் அம்மா, கமருதீனின் அக்கா என இருவரும் வீட்டிற்குள் ஒன்றாக இருக்கிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் அமர்ந்து பேசி முடிவெடுத்து, கல்யாண தேதியை குறிப்பார்களா என்று எல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். நேற்று இரவு கமருதீனின் தல அறையில் பார்வதி தூங்க முயன்றது பெரும் சர்ச்சைக்குரியதாக ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Bigg Boss Tamil 9 Kamurudin Sister Passing Comment About VJ Parvathy BB Promo
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X