Bigg Boss: சான்ட்ரா காலில் விழுந்த கமருதீன்.. திமிரா பேசும் போது ஜாலியா இருந்ததா? விளாசும் ரசிகர்கள்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இன் 90 வது நாளான இன்று வீக் என்டின் முதல் நாள். கடந்த வாரத்தில் நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சான்ட்ராவை பார்வதியும் கமருதீனும் எட்டி உதைத்து கீழே தள்ளினார்கள். இப்படி இருக்கும்போது இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோவிலேயே அவர்கள் இருவருக்கும் விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்து விட்டார். அப்படி இருக்கும் போது, மூன்றாவது ப்ரோமோவில் சான்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் கமருதீன்.

நேற்றை எபிசோடில் நடைபெற்ற கார் டாஸ்க்கில், அமைதியாக இருந்த சான்ட்ராவை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்து, தகாத வார்த்தைகள் பேசினார் கமருதீன். பதிலுக்கு சான்ட்ராவையும் பேச வைத்துவிட்டார். இப்படி இருக்கும்போது, பார்வதியுடன் இணைந்து கொண்டு, சான்ட்ராவை காருக்குள் இருந்து உதைத்து தள்ளி விட்டனர். இப்படியான சூழலில், இன்றைக்கு அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியேறச் சொல்லி விட்டார் விஜய் சேதுபதி.

Bigg Boss Tamil 9 Kamurudin Touch Sandra Amy Feet And Asks Apology For Kicked At Car Task
Photo Credit:

ரெட் கார்டு: சான்ட்ராவை கீழே தள்ளிவிட்டது தொடர்பாக ஆத்திரத்தில் கமருதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்கல்ஸ் விக்ரமுக்கு கொலை மிரட்டல் எல்லாம் விடுத்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கும்போது விஜய் சேதுபதி ரெட் கார்டு கொடுத்தது பார்வதி மற்றும் கமருதீனுக்கு ஷாக் கொடுக்கும் விதமாகத்தான் இருந்தது.

திருந்தாத பார்வதி: அதன் பின்னர் திவ்யா கமருதீனை நோக்கி, " பார்வதி உன்னைத் தூண்டி விட்டு பேச வைக்கிறாள், உனது கெரியர் முக்கியம் என்று நான் சொன்னேனா இல்லை என்று கூறுகிறார். அதற்கு பார்வதி தனது தவறை அப்போது கூட உணராமல் திவ்யாவிடம் கத்துகிறார். அதற்கு திவ்யாவோ, வெளியே போ நீ, நீ பேசவே கூடாது என்று பதிலடி கொடுக்கிறார். அடுத்து கானா வினோத், கமருதீனை நோக்கி, உன் வாழ்க்கையில் உன்னை இந்த அளவுக்கு நிற்க வைத்ததற்கு காரணம் பார்வதி தான் என்று கூறுகிறார்.

Bigg Boss Tamil 9 Kamurudin Touch Sandra Amy Feet And Asks Apology For Kicked At Car Task
Photo Credit:

காலில் விழுந்த கமருதீன்: அதையடுத்து, பார்வதி சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்கிறார். கமருதீன் அழுது கொண்டே சான்ட்ரா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இதுதான் மூன்றாவது ப்ரோமோவில் உள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், சான்ட்ரா காரில் இருந்து உதைத்து தள்ளும் போதும், சான்ட்ராவை மிகவும் மோசமாக பேசும் போதும், நன்றாக இருந்ததா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இன்று இணையத்தில் ரசிகர்கள் பலரும் பார்வதி மற்றும் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் நேற்றே கமருதீன் தனியாக அமர்ந்து நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X