Bigg Boss: எலிமினேட் ஆன கனி திரு.. ரசிகர்களும் ஓட்டும் காரணமில்லைனு குற்றம் சொல்லும் தங்கை விஜி

சென்னை: பிக் பாஸ் தமிழ் 12 வாரங்கள் முடிந்து, 13 வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. 12 வது வாரத்தில் மொத்தம் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டார்கள். இதில் ரசிகர்களுக்கே மிகவும் ஷாக் கொடுத்த எலிமினேஷன் என்றால் அது கனி திருவின் எலிமினேஷன் தான். இவர் கடைசி வரை வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 84 வது நாளில் எலிமினேட் செய்யப்பட்டார். எலிமினேட் ஆன கனி திருவை வரவேற்க, அவரது சகோதரியும் நடிகையுமான விஜி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீசன் போட்டியாளர்களில் கனி திரு, மிகவும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவர். சக போட்டியாளர்களுடன் அன்பாக பழகி வந்த கனி திருவை பிக்பாஸ் ரசிகர்கள் ராஜா மாதா என்று எல்லாம், அழைத்து வந்தார்கள். இப்படி இருக்கும்போது, அவர் இந்த வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்தது.

Bigg Boss Tamil 9 Kani Thiru Evicted At 12th Week Her Sister Viji Accused IT s Totally Corporate Calculations
Photo Credit:

இந்நிலையில் அவரது தங்கை வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்க முடியும்? உள்ளேயும் வெளியேயும் இவ்வளவு அழகாக எப்படி இருக்க முடியும். தெளிவும் அர்ப்பணிக்கும் எப்படி வந்தது என பல கேள்விகளை ஏற்படுத்திய பெரிய ஆச்சரியம் அவள். இங்கு அலப்பறைகள் எல்லாம் மேடை ஏறும் போது, ஆச்சரியங்கள் வீட்டுக்குள்ள இருக்க முடியுமா? அதனால்தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

விஜி வீடியோ: எனது அக்காவின் இந்த 84 நாட்கள் எங்கள் குடுமபத்திற்கான பெருமை. மனதளவில் வலிமை, கோட்பாட்டு அடிப்படையில் தெளிவு, உணர்வுபூர்வமாகவும் தெளிவான நபர், இது மட்டும் இல்லாமல், கனிதிருவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எக்கச்சக்க இதயங்கள். இவ்வளவு இருந்தும் எப்படி எவிக்ட் ஆனா? காரணங்களைத் தேடினால் அது, கார்ப்ரேட் கால்குலேஷனில் சென்று முடியலாம். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்பதை நம்பி, அவர்களை விட்டுவிடலாம்.

Bigg Boss Tamil 9 Kani Thiru Evicted At 12th Week Her Sister Viji Accused IT s Totally Corporate Calculations
Photo Credit:

இதுதான் காரணமா?: கனி ரொம்பவும் ஸ்டிராங், கனி ஆட்டத்தில் இருந்தால் கட்டாயம் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று நாமினேட் செய்யப்பட்ட கனி அக்கா, அதே காரணத்திற்காகத்தான் எலிமினேட் ஆனால் என்று நான் நம்புகிறேன். அந்த ஸ்டேஜ் ரொம்பவும் பிரமாண்டமானது. கனி அக்காவால் அந்த டைட்டிலை என்றைக்கும் வின் பண்ண முடியாது. அந்த டைட்டிலும் கனி அக்காவை எப்போதும் வின் பண்ண முடியாது. இங்கு உங்களுக்கு முன்னால் நான் உருவாக்கி வைத்துள்ள ஸ்டேஜ், ரொம்ப குட்டி. இங்கு நான் கனிக்கு கிரீடம் அணிவிக்கப் போகிறேன், டைட்டில் என்ன தெரியுமா?, " கனி திரு" என்று பேசி அந்த வீடியோவை அழகாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கனி திரு எலிமினேட் ஆனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X