Bigg Boss: நான் நம்பின சாமியே நீங்க தான்.. என்னை ஏன் உங்களுக்கு பிடிக்கல? கண்ணீரில் கனிதிரு - வீடியோ

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில் 13வது வாரத்திற்குள் வெற்றிகரமாக நுழைகிறது. வாரா வாரம் இந்த நிகழ்ச்சியில் யாரோ ஒரு போட்டியாளர் வெளியேறுவது என்பது இயல்புதான் என்றாலும், சில வாரங்களில் ரசிகர்களுக்கு எவிக்‌ஷன் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும். அப்படி அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிர்ச்சி தான், கடந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கனி திருவின் எவிக்‌ஷன். இது ரசிகர்களுக்கே ஷாக் கொடுத்தாலும், தற்போது தனது எவிக்‌ஷன் குறித்து முதன் முதலாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடத்தில் தனது எண்ணத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக கனி திரு வெளியிட்டுள்ள வீடியோவில், " ஆமாம், நான் எவிக்ட் ஆகிவிட்டேன். நான் எவிக்ட் ஆன அந்த மெமண்ட் எனக்கு எப்படி இருந்தது என்றால், என்னால் முதலில் அதை நம்ப முடியவில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் என்னை நான் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கவில்லை. மனசுக்குள் ஒன்றே ஒன்றுதான் ஓடிக் கொண்டு இருந்தது. மக்கள் தீர்ப்பு அது என்றால் நான் அதை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன்.

Bigg Boss Tamil 9 Kani Thiru Tears On Thanks Note Video After Eviction

உங்கள் அனைவருக்கும் தெரியாதது இல்லை, ஒரு 24 மணி நேரம் தனிமையாக இருக்க வேண்டும். அந்த 24 மணி நேரம் தான் எனது வாழ்க்கையின் மிகவும் கொடுமையான தருணம். அந்த 24 மணி நேரமும் எனது மனதுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது எல்லாம், ஒன்றுதான். அது, மக்களுக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்பதுதான். எனக்கு மனிதர்களை மிகவும் பிடிக்கும். நீங்கள் என்னைத் தேர்வு செய்யவில்லை என்பதை என்னால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. இதனால் அந்த 24 மணி நேரமும் நான் முடிந்தேன் என்று இருந்தது.

உயிர் போய் வந்தது: அதன் பின்னர் வீட்டில் இருந்து விஜி, திரு உள்ளிட்ட அனைவரும் வந்த போதுதான் எனக்கு போன உயிர் திரும்பவும் வந்தது. உங்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. உங்கள் அனைவரது வீடியோக்களை பார்த்தேன். மெசேஜ்களை படித்தேன். நீங்கள் எனக்கு என்ன செய்துள்ளீர்கள் என்பதை விளக்க என்னிடத்தில் வார்த்தைகளே இல்லை.

Bigg Boss Tamil 9 Kani Thiru Tears On Thanks Note Video After Eviction

நான் நம்பின சாமிகள்: எனக்கு இருப்பது எல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள் தான். உங்களின் இந்த அன்புக்கு என்றைக்குமே நான் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதுதான். லவ் யூ சோ மச். இந்த அன்பை எனக்கு எப்போதும் கொடுத்து கொண்டே இருங்கள். நானும் அன்பை கொடுத்துக் கொண்டே இருப்பேன். நான் வணங்கும் சாமிகளும் நம்பும் சாமிகளும் என்னை கைவிடவில்லை " என்று வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கனி திரு அழுதது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: அவரது கண்ணீரைப் பார்த்த ரசிகர்கள், கனி திருவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் பலர், தயவு செய்து அழுக வேண்டாம் கனி என்று எல்லாம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, கனி திருவின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X