Bigg Boss: பிக்பாஸ் கடலோடி சுபிக்‌ஷாவுக்கு உற்சாக வரவேற்பு.. அடி பின்னி எடுத்துட்டாங்கப்பா.. வீடியோ!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அடுத்த வாரத்துடன் முடிவடைகிறது. கடந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே, இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் என இறுதி கட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் கடந்த வாரம் எவிக்ட் ஆகி வெளியேறிய சுபிக்‌ஷாவுக்கு அவரது ஊர் மக்களும் குடும்பத்தினரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரத்தில் சுபிக்‌ஷா வெளியேறிய போது பிக்பாஸ் மிகவும் எமோஷனலாக பேசி வழி அனுப்பி வைத்தார். மேலும் சுபிக்‌ஷாவை நினைத்து பெருமைப் படுவதாகவும் அறிவித்தார். இப்படி இருக்கும்போது, சுபிக்‌ஷா மிகவும் மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் வெளியேறினார். குறிப்பாக கடலோடி என்று சொல்லும்போது சுபிக்‌ஷா அழுதேவிட்டார். அதேபோல் விஜய் சேதுபதி கூறும் போது கூட, பீட் - பாக்ஸிங்கை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி வழி அனுப்பி வைத்தார்.

Bigg Boss Tamil 9 Meenava Ponnu Subiksha Receives Grand Welcome From Her Family and Friends - Watch
Photo Credit:

கடலோடி சுபிக்‌ஷா: சுபிக்‌ஷா தமிழ்நாட்டின் கடைகோடியான கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது, உள்ளிட்ட பல வேலைகளைச் செய்தும், அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இப்படி இருக்கையில் சுபிக்‌ஷா பிக்பாஸில் வந்தபோது பலருக்கும் ஆச்சரியம் தான். இந்த பெண் பிக்பாஸ் போன்ற கார்ப்ரேட் நிகழ்ச்சியில் என்ன செய்யப்போகிறார் என்பது பலரது பிரதான கேள்வியாக இருந்தது.

உற்சாக வரவேற்பு: ஆனால் சுபிக்‌ஷா தனது கடின முயற்சியினாலும் ஆர்வத்தாலும் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேலாக இருந்து மக்கள் மனதை வென்றுள்ளார். டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் மிகவும் சிறப்பாக விளையாடி மொத்த பிக்பாஸ் ரசிகர்கள் மனஹ்டையும் வென்றுவிட்டார். இப்படி இருக்கையில் அவர் கடந்த வாரம் வெளியேறினார். தனது சொந்த ஊருக்குச் சென்ற சுபிக்‌ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கேரளா புகழ் செண்டை மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து, மாலை அணிவித்து ஆட்டம் பாட்டத்துடன் சுபிக்‌ஷாவை வரவேற்றனர். இது தொடர்பான வீடியோவை சுபிக்‌ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X