Bigg Boss: ரம்யா அடிச்ச தரமான அடி.. வாயை விட்ட பிரஜின்.. சான்ட்ராவை போட்டு கிழித்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. வழக்கமான சீசன்களில் இறுதி கட்டம் என்றால், எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்பது போல போட்டியாளர்கள் முன்பு நடந்த விஷயங்களை மறந்து சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் இந்த சீசன் போட்டியாளர்களோ, ஒன்னு நீ இருக்கனும்.. இல்லை நான் இருக்கனும்.. நாம என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது போல அடுக்கடுக்காக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ரம்யா ஜோ உள்ளே சென்ற பின்னர் சான்ட்ராவை போட்டு கிழித்தெடுத்த ப்ரோமோ இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பற்றி கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் ரம்யாவும் சான்ட்ராவும் இணைந்து பேசும் முழு வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து ரம்யாவுக்கு ஃபயர் விட்டு வருகிறார்கள். சான்ட்ராவிடம் பேசுவது மட்டும் இல்லாமல் சபரி உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களிடம் நான் அழுதால் சிம்பதி என்று கூறுகிறீர்கள், நான் அழுதால் கோழை என்கிறீர்கள், நான் அழுதால் ஸ்டேட்டஜி என்கிறீர்கள், சான்ட்ரா அழுததை என்ன என்று சொல்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

Bigg Boss Tamil 9 Netizens Slams Sandra Amy After Prajan Threatening And After Ramya Jo Re Entry

ஏற்கனவே சான்ட்ராவை விமர்சித்தவர்கள் மீது வழக்கு தொடுப்பேன் என்று சான்ட்ராவின் கணவர் பிரஜின் சமூக வலைதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனாலே சான்ட்ராவின் பிக்பாஸ் நடவடிக்கைகளை இணையவாசிகள் போட்டு அடி அடி என அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ரம்யா உள்ளே சென்று சான்ட்ராவின் ஆட்டத்தையே காலி செய்வது போல, வீடே அதிரும் அளவுக்கு பேசியது காத்துக் கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு கண்டெண்ட்டாக மாறியது.

ரம்யா: இதனாலும் போட்டு கிழி கிழி என கிழித்து வருகிறார்கள். அதுவும் ரம்யா மட்டும் இல்லாமல் மற்ற போட்டியாளர்கள் பலரும் சான்ட்ரா எப்படித் தான் டாப் 6 வந்தார் என்று தெரியவில்லை. சான்ட்ராவை விட நான் இந்த நிகழ்ச்சிக்காக அதிக உழைப்பு போட்டுள்ளேன். அவர் அழுது கொண்டே தான் இருந்தார். அதையும் நான் நன்றாக செய்வேனே என்று சான்ட்ராவை கிடைக்கும் கேப்-களில் எல்லாம் போட்டு தாளித்து வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 Netizens Slams Sandra Amy After Prajan Threatening And After Ramya Jo Re Entry

நெட்டிசன்கள்: இப்படி இருக்கையில் வெளியில் இருக்கும் நெட்டிசன்களும் சான்ட்ராவை மட்டும் இல்லாமல், கேஸ் போடுவேன் என்று நெட்டிசன்களை மிரட்டியதற்கும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பான போஸ்ட்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ரம்யாவை பாம்பு என்று சான்ட்ரா சொன்ன வீடியோவை தேடிப் பிடித்து எடுத்து அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். நெட்டிசன்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் பார்த்தால் சான்ட்ரா பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவது என்பது ரொம்பவே நல்ல விஷயம் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X