Bigg Boss: ஊர் கிழவி போல பேச ஆரம்பித்த பார்வதி.. ஒரு பொண்ணும் பையனும் அதை செய்தது ஒரு குத்தமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன் தடாலடியான போட்டியாளர் என்றால் அது பார்வதி தான். சக போட்டியாளர்கள் யாரையுமே தனக்கு சமமானவராக அவர் கருதுவதே இல்லையோ என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகிறார். தர்பூசணி திவாகர் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வில்லை என்றாலும், பார்வதியின் நடவடிக்கை என்பது, நான் இருக்கும்போது நீ ஸ்கோர் செஞ்சுடுவியா என்பது போல இருக்கிறது. இப்படி இருக்கும்போது பிக் பாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் பார்வதியின் பேச்சு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது எனலாம்.

இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி பிக் பாஸ் தரப்பில் வெளியிடப்பட்ட இரண்டாவது ப்ரோமோவில், தர்பூசணி திவாகரிடம் பார்வதி புலம்பிக் கொண்டு இருக்கிறார். அதாவது, " துஷார், கமருதீன், அரோரா என இவர்கள் மூவரும் ஆரம்பத்தில் இருந்தே, நண்பர்களாக இருந்துள்ளார்கள். துஷார் எலிமினேட் ஆகி சென்ற பின்னர், அரோராவுக்கு பற்றிக் கொள்ள ஒருவர் தேவைப்படுகிறார். உடனே, கமருதீனை இது பண்ணி, அவங்க சைடு வைத்துக் கொள்கிறார்கள். திவாகர் முக்கியமா? கமருதீன் முக்கியமா என்று கேட்கிறான்.

Bigg Boss Tamil 9 November 14th Promo VJ Parvathy Blabbering to Diwakar about Kamruddin and Arora
Photo Credit:

நீ (அரோரா) ஏற்கனவே பட்டாவை துஷாரிடம் போட்டுள்ளாய், இங்கு கம்ருதீனை நண்பன் என்று கூறுகிறாய். அப்படியானால், கமருதீன் பார்வதியிடம் பேசினால், உனக்கு ஏன் வலிக்கிறது? இதன் மூலம் நீ (அரோரா) என்ன செய்ய முயற்சிக்கிறாய்? பயங்கரமான கிரிமினல் அண்ணா, அந்த பொண்ணு (அரோரா) . நல்லா கைக்குள்ள போட்டு வெச்சிருக்கா அந்த பொண்ணு" என்று கூறுகிறார். பார்வதி சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்டிக் கொண்டு நிற்கிறார் தர்பூசணி திவாகர்.

இதில் என்ன விஷயம் என்றால், பார்வதி பேசியுள்ளதில், 'கைக்குள்ள போட்டு வெச்சிருக்கா அந்த பொண்ணு என்பதும், ஏற்கனவே துஷாரிடம் பட்டாவைப் போட்டு வைத்துள்ளாய்' என்பதும் ஏதோ, எல்லா கிராமங்களுக்கும் புரளி பேசுவதற்கு என்றே சில கிழவர்களும் கிழவிகளும் இருப்பார்கள். அவர்களை உள்ளூர்வாசிகள், உள்ளூர் கூகுள் என்று விளையாட்டாக சொல்வார்கள் அதுபோல இருக்கிறது, பார்வதியின் பேச்சும், திவாகரின் தலை ஆட்டும் விதமும்.

Bigg Boss Tamil 9 November 14th Promo VJ Parvathy Blabbering to Diwakar about Kamruddin and Arora
Photo Credit:

அந்த ஊருக்குள் யார் வீட்டில் என்ன சமையல் என்பது தொடங்கி, என்ன பிரச்னை, உறவினர்கள் வந்தார்களா வந்தவர்கள் சும்மா வந்தார்களா இல்லை பிரச்னையோடு வந்தார்களா என்பதை எல்லாம் எப்படி கோவில் திண்ணைகளிலும் மரத்தடி நிழல்களிலும் அமர்ந்து கொண்டு வெத்தலையை போட்டு மெல்லும் போது மொத்த ஊரையும் சேர்த்து மெல்லுவார்களே அது போல் இருக்கிறது பார்வதியின் பேச்சு.

இதில் திவாகர் குறித்து தனித்து சொல்லவா வேண்டும், வெற்றிலை கொடுத்தால் வெற்றிலையை கடனாக வாங்கியதற்காக மென்று துப்பும் வரை சிலர், " ஊ" கொட்டிக் கொண்டு இருப்பார்களே அது போல நின்று கொண்டு இருக்கிறார். நேற்றைய எபிசோடு, இன்றைய ப்ரோமோ ஆகியவற்றைப் பார்க்கையில், ஆரோரா குறித்த மோசமான பிம்பத்தை கட்டமைக்க பார்வதி முயற்சிக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. இரு ராஜியங்களுக்கு இடையிலான போட்டியின் போது, அரோராவை நோக்கி, என்ன குறியீடு காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள், இதிலிருந்தே தெரிகிறது உங்கள் சிந்தனை என்று தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X