நேத்து நைட் பார்வதி பண்ண தப்பு.. இன்னும் 10 வருஷம் ஆனாலும் அந்த களங்கம் மாறாது.. விமர்சகர் விளாசல்!
சென்னை: பிக் பாஸ் முதல் சீசனில் இடம்பெற்ற கார் டாஸ்க் சரியான பிசிக்கல் டாஸ்க் என தொடர்ந்து பல சீசன்களாக ரசிகர்கள் பேசி வந்த நிலையில், இந்த சீசனில் குவிந்து கிடக்கும் நெகட்டிவிட்டியை போக்க அந்த டாஸ்க்கை பிக் பாஸ் டீம் கொடுத்தால், அதையும் எந்தளவுக்கு நெகட்டிவிட்டியாக மாற்ற முடியுமோ அந்த அளவுக்கு டாக்ஸிக் பாரு மாற்றிவிட்டார் என பிக் பாஸ் ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.
கார் கதவை திறந்து சாண்ட்ராவை எட்டி உதைத்து கீழே பார்வதி தள்ளியது காட்டுத்தீ போல சோஷியல் மீடியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நெருங்கும் தருவாயில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற அந்த டீம் பக்காவாக வேலை பார்த்து வருகிறது.

சாண்ட்ராவுக்கு என்ன ஆனது, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டார் என ஏகப்பட்ட தகவல்கள் சோஷியல் மீடியாவில் பரவிய நிலையில், சாண்ட்ராவை பாரு எட்டி உதைத்து கீழே தள்ளும் காட்சியை பார்த்த விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
பாவம் செய்த பார்வதி: விஜே பார்வதி பிக் பாஸ் போட்டியாளராக வரவேண்டும் என பல சீசன்களாக ரசிகர்கள் அவர் சர்வைவர் தமிழ் சீசனில் போட்டியாளராக மாறியதில் இருந்தே எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த சீசனில் அவரை பார்த்த ரசிகர்கள் இந்த அளவுக்கு வன்மம் நிறைந்தவரா என காரி துப்பாத குறையாக திட்டி வருகின்றனர். கமருதீன் உடன் அவர் போட்ட காதல் டிராமா எல்லாம் பார்க்கவே கன்றாவியாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட டாக்ஸிக் ஜென்மங்களும் இந்த உலகில் நம்முடனே வாழ்ந்து வருகின்றன என்பதை காட்டும் கண்ணாடியாகவே இந்த சீசன் பிக் பாஸ் மாறியுள்ளது என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சாண்ட்ரா ஓவர் ஆக்டிங்: பிரஜின் மற்றும் சாண்ட்ரா ரசிகர்கள், விஜே பார்வதியை கேவலமாக திட்டித் தீர்த்து வர, பார்வதி ஆர்மியினர் அவர் செய்தது சரி தான். இது ஒரு ஜஸ்ட் கேம் தான் என்றும் சாண்ட்ரா தான் ஓவர் ஆக்டிங் செய்யுறா என்றும் பதிவிட்டு விஜே பார்வதிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து அவரை டைட்டில் வின்னராக்க முடிவு செய்துள்ளனர்.
பிரசாந்த் ரங்கசாமி கண்டனம்: விஜே பார்வதி நேத்து நைட் செய்த பாவம் காரணமாக அவருக்கு குவிந்துள்ள எதிர்ப்பு அலை இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் அது மறையாது என்றும் அந்த அளவுக்கு மோசமான வில்லியாக உள்ளார் பாரு என விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியா முழுவதும் விஜே பார்வதியை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். வெளியே அவர் வந்தால் அடி கன்ஃபார்ம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.
சந்தோஷத்தில் பிக் பாஸ் டீம்: இதுவரை இந்த சீசனை பெரிதாக யாருமே கண்டுக்கொள்ளவில்லையே என நினைத்து கவலைப்பட்ட பிக் பாஸ் டீமுக்கு ஒரே ஒரு பழைய கார் டாஸ்க் மூலமாக ஒட்டுமொத்த மீடியா அட்டென்ஷன் மற்றும் ரசிகர்கள் அட்டென்ஷன் தங்கள் பக்கம் திரும்பியுள்ள நிலையில், நல்ல வருமானம் வரும் என பிக் பாஸ் டீம் சந்தோஷத்தில் இருக்கும் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு பிக் பாஸ் டீமையும் விஜய் சேதுபதியையும் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











