Bigg Boss: ரொம்ப வலிக்குது.. நல்லாதான் விளையாடினேன்...எவிக்‌ஷனால் மனம் நொந்த பிக்பாஸ் பிரவீன்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஐந்து வாரங்கள் முடிந்து ஆறாவது வாரம் தொடங்கியுள்ளது. இப்படி இருக்கையில், 5வது வார கடைசியில் டபுள் எவிக்‌ஷனை நடத்தி, ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் ஷாக் கொடுத்தார்கள். இதில் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் என இருவரும் அடுத்தடுத்த நாளில் வெளியேற்றப்பட்டார்கள். எவிக்‌ஷனான பிரவீன் தனது எவிக்‌ஷன் குறித்து பதிவிட்டுள்ள வீடியோ தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் களமிறங்கி விளையாடிக் கொண்டு இருந்த சிறப்பான போட்டியாளர்களில் ஒருவர் பிரவீன். டாஸ்க்குகள் தொடங்கி, வீட்டில் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இந்த சீசனில் சில போட்டியாளர்கள் எதற்காக வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்று கேள்வி எழும்போது, பிரவீன் மீது அப்படியான எந்த கேள்வியும் எழவில்லை என்றே சொல்லலாம்.

பிரவீன் வெளியேற்றப்பட்டது நியாயமே இல்லை, இந்த வாரத்தில் துஷார் மற்றும் ரம்யா தான் வெளியேற வேண்டியதாக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் பிக் பாஸ் குழுவினர் ஏதோ குளறுபடி செய்து பிரவீனை வெளியேற்றி விட்டார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரவீன் தனது எவிக்‌ஷன் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கையெல்லாம் நடுங்குது: அதாவது அந்த வீடியோவில், " எவிக்‌ஷன் பார்த்தேன், அதைப் பார்த்துவிட்டு என்னாலே முடியவில்லை. அழுது, அழுது கையெல்லாம் நடுங்குகிறது. ரொம்பவும் மனது உடைந்து விட்டேன். நான் தவறு செய்து விட்டேனோ, சரியாக விளையாடவில்லையோ, உங்களின் எதிர்பார்ப்பை நான் தொடவில்லையோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

இது நியாயமா? அதிலிருந்து வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். மிகவும் ஸ்ட்ராங்கான லைட் தான் பிக் பாஸ் சீசன் 9. இந்த எவிக்‌ஷனால் நான் இருட்டைப் பார்த்துவிட்டேனோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் அன்பு மிகவும் உறுதியான அன்பாக உள்ளது. நான் வெளியேற்றப்பட்டது நியாயமானதா? நியாயம் இல்லையா என்று என்னால் சொல்ல முடியவில்லை. கணிக்க முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. ரொம்பவும் உடைந்து போயிருந்த என்னை உங்கள் அன்பால் தூக்கி விட்டுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் எனது நடிப்பின் மூலம் விசுவாசமாக இருப்பேன்.

Bigg Boss Tamil 9 Praveen Express His Thoughts After His Eviction Video Goes Trending
கஷ்டமா இருக்கு: எந்தெந்த தளங்களில் எல்லாம் உங்களை மகிழ்விக்க முடியுமோ, அதில் எல்லாம் மகிழ்விப்பேன். இது முடிவு என்று நினைத்தேன், ஆனால் உங்கள் அன்பால் இது எங்கேயோ போய்க்கொண்டு உள்ளது. ஆனாலும் கஷ்டமாகத்தான் உள்ளது. இந்த வலி எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோக்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பிரவீன்க்கு இன்னும் ஓட்டு போட்டிருக்க வேண்டுமோ என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X