Bigg Boss: எவிக்‌ஷனால் கண்ணீருடன் வீட்டுக்குப் போன பிரவீன்.. ஆரத்தி எடுத்த மனைவி.. மகன் செய்ததுதான் ஹைலைட்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்தில் இரண்டு எவிக்‌ஷன்கள் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற எவிக்‌ஷனில் துஷார் வெளியேற்றப்பட்டார். ஆனால், ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற எவிக்‌ஷன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஆனார்கள். காரணம் ரம்யா தான் எவிக்ட் ஆகப்போகிறார் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்க, பிக் பாஸ் குழுவோ பிரவீனை வெளியேற்றியது. இந்நிலையில் அவர் தனது வீட்டிற்குச் சென்றபோது அவரது குடும்பத்தினர் அவரை எப்படி வரவேற்றார்கள் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த சீசனில் களமிறங்கிய போட்டியாளர்களில் பிரவீன் மிகவும் திறமையான போட்டியாளர்களில் ஒருவர். டாஸ்க் தொடங்கி ஒரு பிரச்னையை அணுகுவது என இவரது பாணி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்கையில் அவர் நேற்று எவிக்ட் செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் நடைபெற்றதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பெருத்த ஏமாற்றத்தோடும் கண்ணீருடனும் எவிக்ட் ஆகி வெளியேறிய பிரவீன் போட்டியாளர்களை மட்டும் இல்லாமல், ரசிகர்களையும் எமோஷனலாக்கியது. வெளியேறிய பின்னர் பெருத்த ஏமாற்றத்துடன் தனது வீட்டிற்குச் சென்ற பிரவீனை அவரது மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றார். அதேபோல் அவரது செல்ல மகனோ மாலை அணிவித்து வரவேற்றார். அதன் பின்னர் மூவரும் இணைந்து கேக் வெட்டினர். இது தொடர்பான வீடியோவை பிரவீன் பகிர்ந்துள்ளார்.

Bigg Boss Tamil 9 Praveen Wife And His Son Gives Warm Welcome To Him After Eviction
Photo Credit:

இது மட்டும் இல்லாமல் பிரவீன் பகிர்ந்துள்ள மற்றொரு வீடியோவில் தனது எவிக்‌ஷன் குறித்து மனம் விட்டுப் பேசியுள்ளார். அதாவது, " எவிக்‌ஷன் பார்த்தேன், அதைப் பார்த்துவிட்டு என்னாலே முடியவில்லை. அழுது, அழுது கையெல்லாம் நடுங்குகிறது. ரொம்பவும் மனது உடைந்து விட்டேன். நான் தவறு செய்து விட்டேனோ, சரியாக விளையாடவில்லையோ, உங்களின் எதிர்பார்ப்பை நான் தொடவில்லையோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

அதிலிருந்து வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். மிகவும் ஸ்ட்ராங்கான லைட் தான் பிக் பாஸ் சீசன் 9. இந்த எவிக்‌ஷனால் நான் இருட்டைப் பார்த்துவிட்டேனோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, உங்கள் அன்பு மிகவும் உறுதியான அன்பாக உள்ளது. நான் வெளியேற்றப்பட்டது நியாயமானதா? நியாயம் இல்லையா என்று என்னால் சொல்ல முடியவில்லை. கணிக்க முடியாத ஒன்றாகத்தான் உள்ளது. ரொம்பவும் உடைந்து போயிருந்த என்னை உங்கள் அன்பால் தூக்கி விட்டுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் எனது நடிப்பின் மூலம் விசுவாசமாக இருப்பேன்.

எந்தெந்த தளங்களில் எல்லாம் உங்களை மகிழ்விக்க முடியுமோ, அதில் எல்லாம் மகிழ்விப்பேன். இது முடிவு என்று நினைத்தேன், ஆனால் உங்கள் அன்பால் இது எங்கேயோ போய்க்கொண்டு உள்ளது. ஆனாலும் கஷ்டமாகத்தான் உள்ளது. இந்த வலி எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X