தவெக சப்போர்ட்டில் இத்தனை நாள் மிக்சர் திண்ணும் சுபி.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய தந்தை!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரம் ஃபேமிலி ரவுண்ட் நடைபெற்றுக் கொண்டுள்ளது. வீட்டில் உள்ள 11 போட்டியாளர்களில் கிட்டத்தட்ட அனைவரது குடும்பத்தினரும் நேற்றைய எபிசோட் வரை வந்துவிட்டார். இன்னும் வரவேண்டியது என்றால் போட்டியாளர்கள் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் சுபிக்ஷா ஆகியோரின் குடும்பத்தினர்தான். அந்த வகையில் இன்று இவர்கள் இருவரது குடும்பத்தினர் வந்துவிட்டனர். இதில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர், சுபிக்ஷாவைச் சந்தித்த பின்னர், சுபிக்ஷாவின் ஆட்டத்தின் மீதான தங்களது விமர்சனத்தை மிகவும் காட்டமாக வெளிப்படுத்தினர்.
சுபிக்ஷா அடிப்படையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மீனவர் சமூக வாழ்வியலை வீடியோவாக பதிவிட்டு இணையவாசிகள் மத்தியில் புகழடைந்தார். அதன் பின்னர் இன்ஃபுளியன்சராகவும் மாறினார். தனது தந்தையுடன் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது, வலைகளை சரி செய்வது, வலைகளை தயார் படுத்துவது உள்ளிட்ட பல வேலைகளை அவர் செய்து வந்தவர்.

தவெக சப்போர்ட்: இவர் பிக்பாஸ் சீசன் 9இல் போட்டியாளராக களமிறக்கப்பட்ட போது, பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் முன் வைத்த விமர்சனம், சுபிக்ஷாவை எதன் அடிப்படையில் பிக்பாஸ் போட்டியாளராக தேர்வு செய்தீர்கள் என்பதுதான். இந்த கேள்வி பல போட்டியாளர்கள் மீது வைக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, இவரை தொடக்க காலங்களில் நாமினேட் செய்த போது, பலரும் சமூல வலைதளங்களில் சுபிக்ஷா, விஜயின் தீவிர ரசிகர், அது மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் அவர் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். தனது படகில் கூட த.வெ.க கொடியைக் கட்டிக் கொண்டுதான் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்கிறார் என்று எல்லாம் கருத்து தெரிவித்தார்கள்.
பின்னடைவு: சுபிக்ஷா டாஸ்க்குகளில் தைரியமாக விளையாடினாலும் இவர் வீட்டிற்குள் அதைக் கடந்து, ரியல் பிக்பாஸ் ஆட்டம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆட்டத்தில் கடைசி இடத்தில் தான் இருக்கிறார் என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கடந்த வாரத்தில் விக்கல்ஸ் விக்ரம் சொன்ன ஒரு விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், தேம்பி தேம்பி அழுத காட்சிகள் வேகமாக பரவியது.

விளாவிசிவிட்ட குடும்பத்தினர்: இப்படி இருக்கும்போது, அவரது குடும்பத்தினர் இன்றைய எபிசோடில் அவரை வீட்டிற்குள் சந்தித்து தெரிவித்துள்ள அறிவுரைகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது சகோதரர் கூறுகையில், பீட் பாக்ஸிங் செய்ய வேண்டாம், பார்வதி, சான்ட்ராவை நம்பாதே, விக்ரமுடன் எப்படி நெருக்கமாக இருக்கிறாயோ அதேபோல் கானா வினோத், கமருதீனுடனும் நெருக்கமாக இரு என்று கூறுகிறார். சுபிக்ஷாவை அப்பா பேசுகையில், உன்னை யாராவது திட்டினால் நீயும் பதிலுக்கு பேசு, எதற்காக ஒதுங்கிப் போகிறாய்? கடலோடியின் மகளா நீ? தைரியமே இல்லையே. சிங்கப் பெண்ணாகவே இல்லையே" என்று கோபமாக பேசுகிறார். இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டு இருக்கிறார் சுபிக்ஷா. இந்த காட்சிகளை விஜய் டிவி இன்றைய இரண்டாவது ப்ரோமோவாக வெளியிட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











