Bigg Boss: பிரஜின் கன்றாவியான புருஷன்.. விளாசி விட்ட சுசித்ரா.. சொன்ன காரணம் இருக்கே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தில் இருந்து தான் கொஞ்சம் பார்க்கும் படியாக உள்ளது. இறக்கிவிட்ட போட்டியாளர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என பிக் பாஸ் குழுவினர் குழம்பி விட்டார்கள் என்று ரசிகர்கள் பேசிக் கொள்ளும் அளவுக்குத்தான் கடந்த வாரங்களில் எல்லாம் இருந்தது. ஆனால் இந்த வாரத்தில் வாரம் முழுவதும் ஆஹா ஓஹோ ஹோட்டல் டாஸ்க்கை கொடுத்து, அதில் 24 மணி நேரமும் அவர்களைப் பங்குபெறச் செய்துவிட்டது சிறப்பான ஐடியா.
இதில் போட்டியாளர்கள் தாங்கள் ப்ரோமோவில் இடம் பெற வேண்டும் என்றோ, எபிசோடில் வரவேண்டும் என்றோ யோசிக்காமல், எதுவும் செய்யாமல் இருந்ததால், இந்த வாரம் எபிசோட்களைப் பார்க்கவே இந்த சீசனில் இந்த ஐந்து வாரங்களில் சிறப்பான வாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ரா வைல்ட் கார்டு போட்டியாளர்களாக களமிறங்கிய பிரஜனை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக அவரை ஒரு கன்றாவியான புருஷன் என்று விமர்சித்துள்ளார்.
அதாவது, இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிரஜின், பிரவீன் மற்றும் கமருதீன் என மூவரும் இணைந்து சண்டையிட்டுக் கொள்வது போல பிராங்க் செய்தார்கள். இது இவர்கள் மூவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. இப்படி இருக்கும்போது, இவர்கள் மூவரும் சண்டையிட்டுக் கொள்ளும் போது போட்டியாளரும் பிரஜினின் மனைவியுமான சாண்ட்ரா எமி கதறி அழுதார். குறிப்பாக நீ ஏன் இப்படி செய்கிறாய், நமக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள், சண்டைக்கு எல்லாம் போக வேண்டாம் என்று எல்லாம் சொல்லி அழுகிறார். அப்படி இருக்கும்போது, இவர்கள் மூவரும் இணைந்து பிக் பாஸிடம் மட்டும் இது குறித்து பேசினார்களே தவிர மற்றவர்களுக்கு இது பிராங்க் என்று தெரியாது.

கன்றாவி புருஷன்: சாண்ட்ரா எமி அழுத போது கூட பிரஜன் இது பிராங்க் என்று கூறவில்லை. இதைக் குறிப்பிட்டு பேசியுள்ள சுசித்ரா, இவர்கள் சண்டை போட்டுக் கொண்டதை பார்த்து சாண்ட்ரா மிகவும் மோசமாக அழுதார். சாண்ட்ராவுக்கு இது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது, அதற்கு அவரது கணவர் பிரஜின் உடந்தையாக இருக்கிறார். என்ன கன்றாவி கணவர் அவர். சாண்ட்ராவை தனியாக அழைத்துச் சென்று அது பிராங்க் என்று உடைத்திருக்கலாமே. ஏன் அதைச் செய்யவில்லை. அவருக்கு ஏன் இந்த பிராங்க் அவ்வளவு முக்கியமானதாக போய்விட்டதா?.
போட்டி மனப்பான்மை: எப்போதும் ஒரு பிராங்க் செய்கிறார்கள் என்றால், அந்த குழுவில் உள்ள ஒருவர் அழுகிறார், பாதிக்கப்படுகிறார் என்றால் அதை பிராங்க் என்று சொல்லிவிடுவது தான் சரியானது. ஆனால், பிரஜின் தனது மனைவி சாண்ட்ரா அழும்போது கூட வாயைத் திறக்கவில்லை. பிரஜன் என்ன அவ்வளவு போட்டி மனப்பான்மை நிறைந்தவரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த கேள்விக்கு சிலர் ஆதரவு தெரிவித்தும், அந்த பிராங்கில் அவர் மட்டுமே சம்பந்தப்படவில்லை, மற்ற இருவரும் இருக்கிறார்கள். எனவே அதை வெளியே சொல்ல வேண்டாம் என்று நினைத்திருக்கலாம் என்றும் பேசி வருகிறார்கள். இந்த பிராங்க் தொடர்பாக விஜய் சேதுபதி கேள்வி எழுப்பும்போது போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய ஷாக்-ஆக இருக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











