Bigg Boss: பார்வதியை அசிங்க அசிங்கமாக பேசும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்.. காதுல கேட்க முடியல ஆண்டவா..

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் பாசிடிவை விட நெகட்டிவ் தான் அதிகமாக இருக்கிறது. விஜய் சேதுபதியில் இருந்து பிக்பாஸ் வரை யார் என்ன சொன்னாலும் போட்டியாளர்கள் தங்களது அணுகு முறையை மாற்றிக் கொள்ளாதது, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். இப்படி இருக்கும்போது இந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான விமர்சனங்களை எதிர் கொண்ட போட்டியாளர் என்றால் அது, பார்வதி தான்.

அவரது ஆட்டம் என்பதே, பிரச்னையை ஏற்படுத்துவது, அதன் மூலம் லைம் லைட்டில் இருப்பது என்பதாகத்தான் இருக்கிறது. கடந்த வாரத்தில் பார்வதியை நோக்கி விஜய் சேதுபதி கேட்ட கேள்விகள் எல்லாம் ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்விகள் தான். அதிலும் விஜய் சேதுபதி பயன்படுத்தும் வார்த்தைகளை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து நிற்கும் பார்வதி, தனது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் தொடர்ந்து ஏதாவது பிரச்னையை உருவாக்கியே வருகிறார். இந்த சீசனில் எந்த போட்டியாளரை நோக்கியும், விஜய் சேதுபதி, நீங்க என்ன லட்சணத்துல வேலை செய்தீர்கள் என்பதை நாங்கள் பார்த்தோமே என்று கேட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கைதட்டல் இருந்தது.

வி.ஜே. பார்வதி: இந்த சீசனின் பெரிய மைனஸ் என்றால் அது பார்வதி தான் என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஆதங்கப்படும் அளவுக்கு, அவரது நடவடிக்கை உள்ளது. இந்நிலையில் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4இல் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கிய பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில வீடியோக்களில் பார்வதியை மிகவும் மோசமாகவும், அசிங்க அசிங்கமாகவும் திட்டுகிறார்.

Bigg Boss Tamil 9 Suchitra Slams VJ Parvathy as Bad Words On Her Instagram
Photo Credit:

சுசித்ரா: அதாவது கமருதீன் சக போட்டியாளர்கள் அனைவரையும் அமரவைத்து, பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பார்வதி எழுந்து செல்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்த சுசித்ரா பார்வதியை மிகவும் மோசமாக திட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால் கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டுகிறார். இதில் என்னவென்றால், முகம் தெரியாத இணையவாசிகள் இது போல மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டுவதை, விமர்சிப்பதை பார்த்துள்ளோம். ஆனால் நன்கு மக்கள் மத்தியில் பிரபலமான பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சுசித்ரா இவ்வாறு திட்டுவது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

கெட்டவார்த்தை: இது மட்டும் இல்லாமல், சுசித்ரா பகிர்ந்துள்ள மற்றொரு வீடியோவில், கமருதீனைப் பாராட்டி பேசியுள்ளார். மேலும் தான் பகிர்ந்த வீடியோவை லைவில் டெலிகாஸ்ட் செய்ததற்கு, விஜய் டிவிக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ரா இவ்வாறு தெரிவித்துள்ள விமர்சனம் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

கமருதீன்: கடந்த வாரத்தில் நடைபெற்ற குடும்ப உறுப்பினர்கள் வந்து சென்றதில் இருந்து, கமருதீனின் ஆட்டம் என்பது மொத்தமாகவே ஜெட் வேகத்தில் உள்ளது. குறிப்பாக பார்வதி விஷயத்தில் அவரது ஆட்டம் என்பது ரசிகர்களே எதிர்பார்க்காத ட்விஸ்ட். இதில் என்னவென்றால், பார்வதிக்கு டிக்கெட் டூ ஃபினாலே கிடைக்க கூடாது என்று ஓபனாகவே சொல்லிவிட்டார் கமருதீன். மேலும், விஜய் சேதுபதியிடம் பார்வதி கடுமையாக திட்டு வாங்க காரணமே கமருதீன் கொண்டு வந்த பிரச்னை தான் என்பதால், ரசிகர்களுக்கு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூடியுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X