Bigg Boss: கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்ட நல்ல பிளேயர்.. இங்கையும் பாலிடிக்ஸா? கடுமையாக சாடிய பிரபலம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வாரத்தோடு சேர்த்து ஐந்தாவது வாரத்தின் கடைசியில் உள்ளது. மற்ற சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் மொத்தமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை எதிர்கொண்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த வார எவிக்ஷன் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போதும் ஆக்ட்டிவாக அப்டேட்டுகளை கொடுத்து வரும், இமாத் எனும் டிவிட்டர் பிரபலம் இந்த வார எவிக்ஷன் குறித்து கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.
இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்படுகிறார்கள் என்று ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் எழக் காரணம், கடந்த வாரமே விஜய் சேதுபதி தெரிவித்திருந்தது தான். அப்படி இருக்கையில் இந்த வாரத்தில் போட்டியாளர்களான ரம்யா ஜோ மற்றும் துஷார் வெளியேறுவதாக முதலில் தகவல்கள் வெளியானது.

ஆனால் இப்போது போட்டியாளர் பிரவீன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, இமாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ரசிகர்களை ஏமாற்ற நான் இதைப் பதிவிடவில்லை. ஆனால் பிரவின் ராஜ் வெளியேற்றம் குறித்த எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . இந்த சீசனில் அவர் மிகவும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவர் - சீரானவர், சுறுசுறுப்பானவர் மற்றும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் முழுமையாக ஈடுபட்டவர். இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க்கில் விருந்தினர்களாக கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளர்கள் கூட பிரவின் ராஜின் முயற்சிகளையும் ஈடுபாட்டையும் பாராட்டி அவரது ஒட்டுமொத்த செயல்திறனுக்காக அவருக்கு ஸ்டார்களை வழங்கினர்.
100%: வீட்டிற்குள் எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கிற அல்லது ப்ரோமோக்களில் வரவேண்டும், அட்டேன்ஷனை உருவாக்க வேண்டும் என்பனவற்றில் கவனம் செலுத்தி வரும் சிலரைப் போலல்லாமல், பிரவின் எப்போதும் அனைவருக்குமான ஒரு போட்டியாளராக இருந்துள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் எல்லா டாஸ்கிலும் விளையாடி தனது 100% ஈடுப்பாட்டை கொடுத்தார்.
கேள்விகள்: அவர் வெளியேற்றப்பட்டுள்ளதால், சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. "ஏன் அவர்?" எவிக்ஷனில் கடைசி நிமிட மாற்றம் ஏன்? அந்த மதிய உணவு இடைவேளையின் போது உண்மையில் என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்கப்படாமல் போகலாம், ஆனால் இந்த கேள்விகளை பிக் பாஸ் குழுவினர் புறக்கணிப்பது கடினம்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த பலரும் பிக் பாஸில் பாலிடிக்ஸா? என்று அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் இவர் குறிப்பிட்டுள்ளதைப் போல, மதிய உணவு இடைவேளையின் போது ஏதாவது நடைபெற்றதா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ மக்கள் அளிக்கும் வாக்கை வைத்துதானே எவிக்ஷன் நடைபெறும் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











