Bigg Boss: ஆத்தி.. பிக் பாஸ் டைட்டில் வின்னரா இது.. திவ்யா கணேஷின் லேட்டஸ்ட் போல்ட் போட்டோஸ்!
சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்காக போல்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தொடையழகு தூக்கலாக தெரியும் அளவுக்கு அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 9-இன் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரம்மாண்ட இறுதிப் போட்டியில், வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கிய திவ்யா கணேஷ், வெற்றிக் கோப்பையை வென்றார். அவருக்கு பரிசாக ₹50 லட்சம் ரொக்கப் பணமும், மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரும் வழங்கப்பட்டது.

2025 அக்டோபரில் 20 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 9 சீசன், விறுவிறுப்பான பல வாரங்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாகலமாக முடிவடைந்தது. இந்த இறுதிப் போட்டி விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாவிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இறுதிப் போட்டியாளர்களின் ஆட்டத்தைக் கண்டுகளித்தனர்.
பிக் பாஸ் டைட்டில் வின்னர்
இறுதிச் சுற்றுக்கு திவ்யா, சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்க்ளேயர் என நான்கு போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். அரோரா சின்க்ளேயர் வெளியேற்றப்பட்ட பிறகு, திவ்யா, சபரி மற்றும் விக்ரம் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில், பிக் பாஸ் வீட்டிற்கு 28வது நாளில் நுழைந்த வைல்டு கார்டு போட்டியாளர் திவ்யா, வெற்றியாளராக உருவெடுத்தார்.
ஆரம்பத்தில் சக போட்டியாளர்கள் பலரும் திவ்யாவின் திறமை குறித்து சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால், நாளடைவில் அவர் ஒரு வலுவான போட்டியாளராக வலம் வந்தார். கார் டாஸ்கின் போது, சாண்ட்ராவை காரில் இருந்து வெளியே தள்ளிய பாரு மற்றும் கமருதீனை எதிர்த்துப் போராடியதன் மூலம், தனது தைரியத்தை வெளிப்படுத்தினார்.
வீட்டிற்குள் தனது ஆட்டத்தை மெருகேற்றிய திவ்யாவை, அழுத்தம் நிறைந்த சூழலிலும் சிறப்பாகச் செயல்பட்டதற்காக விஜய் சேதுபதி பாராட்டினார். அவர் இறுதிப் போட்டியாளராக அறிவிக்கப்பட்டபோது, திவ்யா வெற்றி பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ரசிகர்களின் ஆசை நிறைவேறியது.

யாரு இந்த திவ்யா கணேஷ்?
ராமநாதபுரத்தில் 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறந்த திவ்யா, ஒரு சின்னத்திரை நடிகை. 2015 ஆம் ஆண்டு 'கேளடி கண்மணி' என்ற தொடர் மூலம் தொலைக்காட்சித் துறையில் அறிமுகமானார். இவர் 'லட்சுமி வந்தாச்சு', 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'சுமங்கலி', 'செல்லம்மா', 'மகாநதி', 'அன்னம்' போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
அத்துடன், 'பாக்கியலட்சுமி' தொடர், திவ்யாவை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அறியப்படும் நட்சத்திரமாக மாற்றியது. 2019 ஆம் ஆண்டில் 'பாக்யரேகா' தொடர் மூலம் தெலுங்கு தொலைக்காட்சித் துறையிலும் கால் பதித்தார். 'நின்னு வீடணி நீடனு நானே' (2019), 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்', 'அடங்காதே', 'கண்ணாடி' உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் துணைக் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
நின்றுபோன நிச்சயதார்த்தம்?
திவ்யாவுக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷுக்கும் 2017 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்பட்டது. பின்னர், இந்த நிச்சயதார்த்தம் முறிந்தது. இவர்களது உறவு குறித்து இருவரும் பொதுவெளியில் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை, அதே நேரத்தில் இந்தக் தகவல்களை மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில், தனக்கு காதலன் இருப்பதாக திவ்யா குறிப்பிட்டாரே தவிர, அவரைப் பற்றி விரிவாக எதையும் பகிரவில்லை.
போல்ட் போட்டோஸ்
பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு வடபழனி முருகன் கோயிலில் சுடிதார் அணிந்து சாமி தரிசனம் செய்த திவ்யா கணேஷ் டைட்டிலை வென்ற பின்னர் மீண்டும் சின்னத்திரையில் நடிப்பாரா? அல்லது ரச்சிதா மகாலட்சுமி போல சினிமாவில் ஹீரோயினாக மாறுவாரா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











