BB9: பிக் பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷுக்கு பட்டாசு வெடித்து.. ரோஸ் கொடுத்த ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்து பார்வதி, கம்ருதீனை ஓடவிட்ட திவ்யா கணேஷுக்குத்தான் மக்கள் அதிகம் வாக்குகளை செலுத்தி டைட்டிலை தூக்கிக் கொடுத்தனர். விஜய் சேதுபதி 100 நாட்கள் மேலாக வீட்டில் இருந்த சபரியின் கையையும், பாதியில் வந்த திவ்யாவின் கையையும் பிடித்துக் கொண்டிருக்க ரசிகர்கள் கன்ஃபார்மாக திவ்யா கணேஷ் கை தான் உயரும் என நினைத்தது போலவே அவருக்கு டைட்டில் மற்றும் 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஓய்வெடுத்த திவ்யா கணேஷ் தற்போது சக போட்டியாளர்களுடன் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும், திவ்யாவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் ஆர்மியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வழக்கம் போல ஏகப்பட்ட சர்ச்சைகளுடன் ஆரம்பித்து, கடைசியில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் கிராண்ட் ஃபினாலேவில் பங்கேற்றது வரை சர்ச்சைகளுடனே நிறைவு பெற்றது.

சந்தோஷத்தில் திவ்யா கணேஷ்: பல போட்டிகளில் பங்கேற்பேன், ஆனால், ஒருமுறை கூட வெற்றி பெற்றது கிடையாது. இங்கே தான் முதல் முறையாக எனது வெற்றிக் கோப்பையை பெறுகிறேன் என திவ்யா கணேஷ் டைட்டில் வென்ற சந்தோஷத்தில் பேசியது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பார்வதி அல்லது கம்ருதீன் தான் டைட்டில் வெல்வார்கள் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திவ்யா கணேஷின் வைல்டு கார்டு என்ட்ரி மற்றும் சாண்ட்ராவின் என்ட்ரி வில்லங்கமாக முடிந்து ரெட் கார்டு உடன் வெளியே அனுப்பியும் விட்டது.

திவ்யா கணேஷுக்கு சர்ப்ரைஸ்: சென்னை சர்ப்ரைஸ் டீம் திவ்யா கணேஷுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரை அந்த டீம் சர்ப்ரைஸ் செய்து அவர்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அசத்தி விட்டனர். பட்டாசு வெடித்து, ரோஸ் கொடுத்து "ஊரு அழகி உலக அழகி" பாடலை எல்லாம் போட்டு வேறலெவலில் வைப் ஆக்கிவிட்டனர்.
கோயிலில் சாமி தரிசனம்: திவ்யா கணேஷ் தனது சக போட்டியாளர்களான அரோரா சின்க்ளேர், துஷார், கனி திரு, ஆதிரை மற்றும் சபரி உள்ளிட்ட போட்டியாளர்கள் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











