பிக் பாஸ் டைட்டில் வின்னர் கம்மு.. ரன்னர் அப் பாரு.. காதல், டிராமா, ஆக்‌ஷன்.. உலகமகா நடிப்புடா சாமி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப் இவங்க ரெண்டு பேரு தான் என ரசிகர்கள் இப்பவே கெஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர். இவர்களை கடைசி வரை கொண்டு செல்ல விஜய் டிவியும் விஜய் சேதுபதியுமே முடிவு செய்த நிலையில் தான் இதுவரை ரெட் கார்டு உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் இவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் பொது வெளியில் எழுந்த நிலையிலும், வரவில்லை என்கின்றனர்.

டிவி சீரியல்களில் தான் கள்ளக் காதல் கதை இஷ்டத்துக்கு இருக்கும் என்று விவேக் காமெடியில் கூட சொல்வார். ஆனால், இந்த சீசனில் ஏகப்பட்ட முக்கோண காதல்கள் என வெறும் லவ் கன்டென்ட் மட்டுமே வச்சு ஓட்டிவிட நினைத்தனர்.

Bigg Boss Tamil 9 Title Winner Kamrudin and Runner up Vj Parvathy fans trolls their recent fight drama
Photo Credit:

ஆதிரையை இதே சர்ச்சையில் தான் முதலில் எலிமினேட் செய்து மீண்டும் வைல்ட் கார்டாக கொண்டு வந்து மறுபடியும் எலிமினேட் செய்தார்கள். ஆனால், பாரு மற்றும் கம்மு இருவரும் கம் போட்டு ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

டைட்டில் வின்னர் கம்மு தான்: கமருதீன் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னரை இப்பவே எழுதி வச்சிக்கோங்கப்பா என ரசிகர்களே சொல்ல ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றுக் கொண்டிருக்கிறது. ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் சண்டை போட்டு இருவரும் டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப் ஆக மாறியதை போல இவர்களும் தற்போது கடைசி நேரத்தில் சண்டைப் போடுவதெல்லாம் பக்கா டிராமா என்கின்றனர்.

பாரு தான் ரன்னர் அப்: பிக் பாஸ் வீட்டில் விஜே பார்வதி இத்தனை நாள் இருந்ததே ஆச்சர்யம் தான் என ரசிகர்களும், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடத்துவதே பாரு தான் என அவரது ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கம்மு உடன் கம்மு போல ஒட்டிக் கொண்டிருந்த பாரு தற்போது ஃபேமிலி ரவுண்டுக்குப் பிறகு கம்முவை எதிர்த்து நாமினேட் செய்வது, பேட் டச் விவகாரம் என ஃபைனல் டெஸ்டினேஷன் கேமை விளையாட ஆரம்பித்துள்ளார். இருவரும் திட்டமிட்டு கிராண்ட் ஃபினாலேவுக்குச் செல்லப் போகின்றனர் என்கின்றனர். இந்த வாரம் என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X