ரெட் கார்டு கமருதீனை பிக்பாஸ் மேடையேற்றிய விஜய் சேதுபதி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களுக்கு பல்பா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்றுடன் அதாவது ஜனவரி 18ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதில் விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் மற்றும் அரோரா என நான்கு பேர் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் போது மிகவும் மூர்க்கமாக நடந்து கொண்ட கமருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினாரகள். இந்நிலையில் இன்று இறுதிப் நாளில் கமருதீனை மேடை ஏற்றி, ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி ஷாக் கொடுத்துள்ளார்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல டிக்கெட் டூ ஃபினாலே நடைபெற்றுக் கொண்டு இருந்த போது, கடைசி டாஸ்க் ஆன கார் டாஸ்க்கின் போது சக போட்டியாளரான சாண்ட்ராவை பார்வதி மற்றும் கமருதீன் என இருவரும் இணைந்து காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளினர். இது போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் அந்த வாரத்தின் கடைசியில் கமருதீன் மற்றும் பார்வதி என இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
கமருதீன்: இவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய போது, பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடித் தீர்த்தார்கள். ஒரு போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டபோது ரசிகர்கள் யாரும் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு கொண்டாடி தீர்த்ததில்லை. இது மட்டும் இல்லாமல் விஜய் டிவி தரப்பில், பிக் பாஸ் வரலாற்றில் ஒரு எபிசோடை மீண்டும் ரீ டெலிகாஸ்ட் செய்தது எல்லாம் இவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்தது தொடர்பான எபிசோட் தான்.
ரசிகர்கள் அதிருப்தி: இப்படி இருக்கையில் அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்தது சரி என்றாலும் ரசிகர்கள் பலருக்கும் கமருதீன் மீது கொஞ்சம் கரிசணம் இருந்தது. இப்படி இருக்கையில், பிக்பாஸ் இறுதி மேடையில் கமருதீனை மீண்டும் மேடை ஏற்றியது, ரசிகர்களை பெரும் குழப்பத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாக்கி உள்ளது. இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் மற்றும் விஜய் சேதுபதி மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











