பிக்பாஸில் மொரட்டு சம்பவம்..தகரம்னு நினைச்சீங்களா.. தங்கம்டா.. அந்த பொண்ணுக்கு ஃபயர் விடும் விஜய் சேதுபதி

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 எந்த அளவுக்கு டேமேஜ் ஆக முடியுமோ, அந்த அளவுக்கு டேமேஜ் ஆகி விட்டது. பிக்பாஸ் தரப்பில் இதுதான்டா இந்த சீசனோட பெஸ்ட் மொமன்ட் என்று சொல்லும்படியான சம்பவங்கள் என்று வெகு சிலதே உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் நேற்றைய அதாவது டிசம்பர் 14ஆம் தேதி வீக் எண்ட் எபிசோடில் நடைபெற்றது.

அதாவது கடந்த வாரத்தில் வைக்கப்பட்ட கோர்ட் டாஸ்க்கில் போட்டியாளர்களான அரோரா மற்றொரு போட்டியாளரான FJ மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், தனது தரப்பில் வாதிட, அரோராவை நியமித்தார். ஆனால் இந்த வழக்கில் முதல் சுற்று விசாரணையிலேயே தான் செய்தது தவறுதான் என்று தான் ஒப்புக் கொள்வதாக FJ கூற, வழக்கின் தீர்ப்பு ஆதிரைக்கு ஆதரவாக முடிந்தது. ஆனால் ஆதிரைக்கு இதில் உடன்பாடு இல்லை. காரணம் தனது வழக்கு நன்கு விலாவரியாக விசாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான். அது தொடர்பாக முறையிட்டபோது, ஆதிரை குறித்து எனக்கு 10 விஷயங்கள் தெரியும் அதை எல்லாம் வெளியே சொன்னால், ஆதிரைக்கு தான் அசிங்கம் என்பது போல FJ வீட்டின் நடுவே கத்தினார்.

Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Appreciates Aurora Opinion about Aadhirai and FJ Issues

அதன் பின்னர் ஆதிரை, அரோரா மற்றும் FJ என மூவரும் தனியாக அமர்ந்து பேசினார்கள். அப்போது தன்னிடம் ஆதிரை முத்தம் கேட்டார், நான் அவருக்கு தலையில் முத்தமிட்டேன் என்று FJ கூறினார். அதற்கு ஆதிரை எனக்கு இதில் தவறு எதுவும் தெரியவில்லை. இப்போது நடைபெற்ற ஒரு டாஸ்க்கில் கூட, விக்ரமை அழைத்து நான் தான் கட்டிப் பிடித்தேன். இதில் தவறோ அல்லது வேறு உள் அர்த்தமோ இல்லை என்று தெரிவித்தார்.

அரோரா: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வீக் எண்டில் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பி விவாதித்தார். அப்படி இருக்கும்போது, இந்த விஷயம் தொடர்பாக அரோராவிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரோரா, " இந்த வழக்கில் வாதாட முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது. இதனால் நான் விக்ரம் உடன் பேசிக் கொண்டு இருந்தேன். அங்கு இருந்த FJ பேச பேச, ஒரு கட்டத்தில் கோபத்தில் நான் பாவம் பார்த்து தான் அமைதியாக இருந்தேன். எங்கிட்ட 10 விஷயம் இருக்கு அதை வெளியே சொன்னால் ஆதிரையின் கெரியரே காலி ஆகிவிடும் என்று சொன்னார்.

Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Appreciates Aurora Opinion about Aadhirai and FJ Issues

நல்ல பாய்ண்ட்: உடனே நான் என்ன 10 விஷயம் சொல்லு என்றேன். அதற்கு அவர் அவர்கள் இருவருக்குள்ளும் நடந்த ஒரு விஷயத்தைச் சொன்னார். நீ இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு 10 விஷயம் என்று சொல்லும்போது மீதமுள்ளவற்றை மக்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறாய் என்று சொன்னேன். மேலும் ஆதிரையின் இமேஜைக் கெடுக்க வேண்டும், உன்னைப்பற்றி இப்படி எல்லாம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவது போல் தான் இருந்தது. அது இந்த நிகழ்ச்சிக்கு நல்லது இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது" என்று அரோரா சொன்னார்.

பாராட்டிய சேதுபதி: இதைக் கேட்டதும் விஜய் சேதுபதி, " பிரமாதமாக சொன்னீர்கள். அரோரா நான் உங்களை மீண்டும் பாராட்டுகிறேன். பல விஷயங்களை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் புரிந்து கொண்டு, உள்ளார்ந்த சிந்தனையில் இருந்து ஒரு விளக்கம் கொடுக்குறீர்கள். இந்த அரோரா முன்பு இருந்தே இருந்திருந்தால் ரொம்பவும் நன்றாக இருந்திருக்கும். இந்த அரோராவை எழுப்பி அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இந்த குணத்தில் உள்ள அரோரா ரொம்பவும் அழகாக தெரிகிறீர்கள். மிகவும் பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு அரோராவை வெளிக்காட்டியதில் நாங்க ரொம்ப சந்தோஷப்படுகிறோம்" என்று கூறினார். அரோராவின் இந்த பேச்சும், அவரை விஜய் சேதுபதி பாராட்டியதும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X