எல்லாத்துக்கும் காரணமான பார்வதியை தூக்கி வீசியது விஜய் சேதுபதிதான்.. சேனல் வட்டாரத்தில் அடிபடும் பேச்சு

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் நேற்றைய எபிசோட் தான் அதிக அளவிலான ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு எபிசோடாக இருந்திருக்கும். காரணம் உலகம் அறிந்தது தான் என்றாலும், இது பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட பல நாள் கோரிக்கை. பார்வதி மற்றும் கமருதீன் என இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்ததை ரசிகர்கள் வரவேற்றாலும், பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற முடிவை தீர்க்கமாக எடுத்தது விஜய் சேதுபதிதான் என்று கூறப்படுகிறது.

பார்வதிக்கும் கமருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு மிகவும் முக்கியமான காரணமே இருவரும் இணைந்து, டிக்கெட் டூ ஃபினாலேவின் இறுதி டாஸ்க்கான கார் டாஸ்க்கில், சக போட்டியாளர் சான்ட்ராவை காருக்குள் இருந்து எட்டி உதைத்து வெளியே தள்ளினர். இது சக போட்டியாளர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.

Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Initiates Red Card To VJ Parvathy and Kamarudin
Photo Credit:

பார்வதி - கமருதீன்: இதனால் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த விவகாரத்தை பொறுத்த வரையில் சேனல் தரப்பில் இருந்து கமருதீனுக்கு மட்டும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடலாம் என்றும் பார்வதிக்கு எச்சரிக்கை மட்டும் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜய் சேதுபதி மிகவும் தெளிவாக பிக்பாஸ் குழுவினரிடம் விளக்கிப் பேசியுள்ளார்.

இருவருக்கும் ரெட் கார்டு: அதாவது கமருதீனை இத்தனை வாரங்களாக பார்த்து வருகிறோம், இப்படியான மோசமான செயலை செய்ய, பார்வதி தான் அவரைத் தூண்டி விட்டுள்ளார். கமருதீன் ஒரு ஆணாக இருந்து இதை செய்ததால் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றால், இப்படியான மோசமான சம்பவத்திற்கு தூண்டிய பார்வதிக்கும் ரெட் கார்டு கொடுப்பது தான் சரி என்று சொன்னதாக பேச்சு அடிபடுகிறது.

Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Initiates Red Card To VJ Parvathy and Kamarudin
Photo Credit:

பாராட்டு: இது குறித்த தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் சேதுபதியை பாராட்டி வருகிறார். ஒரே தவறுக்கு இரு வேறு தண்டனைகள் என்பது சரியானதாக இருக்காது என்றும், இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்தது சரிதான் என்றும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X